*1.* கும்பிடும் வரை கடவுள்;
*திருட்டுப் போனால் சிலை...!*
*(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)*
*2.* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!*
*(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)*
*3.* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்
*அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!*
*(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)*
*4.* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது
*ஒரு தீ குச்சியின் மரணம்..!*
*(மரணம் ஒரு முடிவு அல்ல... !)*
*5.* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட
*வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை...!*
*(நிதர்சனமான உண்மை)*
*6.* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!*
*(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)*
*7.* இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவார். *வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவார்.!*
*(எல்லாம் பீஸ் தான் காரணம்)*
*8.* இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு,
*இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு...!*
*(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)*
*9.* மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.
*இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!*
*(யூஸ் பண்ணத் தெரியல.. அவ்ளோதான்)*
*10.* தூக்கம் வராமல் முதலாளி...
*தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!*
*(கரன்சி பண்ற வேலை
No comments:
Post a Comment