_*ஞானத்தை எப்படி விளக்குவது...???*_
ஞானம் என்பது
ஒரு பிரமாண்டமான அனுபவம் அல்ல
ஞானம் என்பது ஒரு எளிய அறிவுப்பூர்வமான புரிதல் மட்டுமே
ஞானம் பெறுவதற்கு பயிற்சியும் தேவை இல்லை, முயற்சியும் தேவை இல்லை
ஒரு நொடிபொழுது போதும் இதனை புரிந்து கொள்வதற்கு
ஞானம் என்பது
நம் அறிவு தன் எல்லையை புரிந்து கொள்ளுவது
நம் அறிவு தனக்கு எங்கே வேலை இருக்கிறது
தனக்கு எங்கே வேலை இல்லை என்று புரிந்து கொள்ளுவது தான் ஞானம்
நாம் நமது மனோ இயக்கம் சம்பந்தமாக,
நாமாகச் செயல்படுவதற்கு எதுவும் இல்லை என்பதைக் கண்டுகொள்வதே 'ஞானம்'
நம்முடைய மன உணர்வுகளைச் சீரமைக்கும் வல்லமை நமக்கு
கிடையாது
என்ற நமது இயலாமையை நாம் அறிவுப்பூர்வமாகப் புரிந்துக் கொள்வதுதான் 'ஞானம்'
நம் அறிவு புறச்செயல்களை நிர்வாகம் செய்யலாம்
மனதையும் நிர்வாகம் செய்ய முயலுவது தான்
நம் எல்லா மன பிரச்சனைகளுக்கும் காரணம்
நம் அறிவு நம் மனதை நிர்வாகம் செய்ய முடியாது
என்று புரிந்து கொள்வது தான் … ‘ஞானம்’
.
மனதில் எண்ணங்கள் அதன் போக்கில் தான் வரும்
அவை நம் அறிவின் கட்டுபாட்டுக்குள் இல்லை
என்று புரிந்து கொள்வது தான் ‘ஞானம்’
நாம் தூங்குவதற்கு செல்கிறோம்
எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன
"எண்ணங்களே..!!!
நான் தூங்க போகிறேன்
நாளை வாருங்கள்"
என்று சொன்னால் கேட்குமா...???
"மனசே, இன்று முழுவதும் மகிழ்ச்சியான எண்ணங்கள் மட்டுமே வர வேண்டும்
கோபம், துக்க எண்ணங்கள் வர கூடாது"
என்று நம் மனதிடம் நம் அறிவு ஒரு கோரிக்கை வைத்தால்
நம் மனது கேட்குமா...???
நம் மனம் நம் அறிவின் கைகளில் இல்லை
என்று அறிவுபூர்வமாக புரிந்து கொள்வது தான் ‘ஞானம்’
புறத்தில் நடப்பவற்றை எல்லாம் பிரதிபலிப்பது நம் மனதின் இயற்கை
நம் அறிவு முயற்சி செய்து
தான் விரும்பியதை நம் மனம் பிரதிபலிக்க வேண்டும்
என்று ஒவ்வொரு கணமும் போராடுகிறது
இந்த முடிவில்லா போராட்டம்,
ஒரு வீண்முயற்சி என்று நம் அறிவு புரிந்து கொள்ளும் பொழுது
தன் முயற்சியை முழுமையாக கைவிடுவது தான் ஞானம்
இதுவே அகசரணாகதி
ஞானம் என்பது ஒரு 'அறிவுபூர்வமான புரிதல்' (Intellectual Understanding) மட்டுமே
.
எல்லாம் அவன் செயல்
நம் மனதில் தோன்றும் இன்ப தும்பங்கள் எல்லாம் அவன் செயல்
என்று பக்தி மார்க்கம் போதிக்கும் சரணாகதியும்,
இந்த அகசரணாகதி தான்
சும்மா இருப்பது என்பது நம் முயற்சியால் வருவதன்று
முயற்சியை கை விடுவதால் வருவது
இந்த உண்மையை எவரும் கடை பிடித்து புரிந்து கொள்ள முடியும்
இது நம் மனதிற்கானது
இந்த 'ஞான புரிதலின்' விளைவு...???
ஞானப் புரிதலுக்கு பின்
நம் மனம் விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது
சதா மகிழ்ச்சியையும் நிம்மதியையும்,
மனதிடம் தேடி கொண்டு இருந்த நம் அறிவு
தேடுதலை நிறுத்தி விடுகிறது
மனதில் ஓடும் உணர்வுகளுடன் போராடி
புதுப்பித்துக் கொள்வதை நிறுத்தி விடுகிறது
அறிவின் குறுக்கீடோடு இல்லாத நம் மனம் நின்று விடுவதில்லை
அது விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது
இதுவே விடுதலை
இதுவே ஆன்மீகத்தில் உயர்வாக கருதப்படும் முக்தி
இதுவே ஞான விடுதலை
இந்த விடுதலை ஒரு அனுபவம் அன்று
எல்லா அனுபவங்களும் சுதந்திரமாக வந்து போவது தான் விடுதலை
ஒரு குழந்தையானது இந்த விடுதலையுடன் தான் இருக்கின்றது
_*எல்லா ஞானிகளும் இந்த மன விடுதலையுடன் தான் வாழ்கின்றார்கள்*_
No comments:
Post a Comment