*வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் சகோதரரை சந்திக்க 50000 ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு அகஸ்டின் என்பவர் நேற்று காலை வந்தார்.*
பணம் இருந்த பை அவரது இரு சக்கர வாகன சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் இருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் அகஸ்டின் வாகனத்தில் இருந்த பணப் பையை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.
இதைக்கண்ட அகஸ்டின் கூச்சலிட்டார். அப்போது பொது மக்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த காவலர்கள் விரட்டிச் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே சென்றதும் அந்த நபர் பின்தொடர்ந்து வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றனர்.
அந்த நேரத்தில் ஆட்சியர் அலுவலக பெண் காவலர்கள் அந்த மூன்று பேரையும் மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஜீவிதா என்ற பெண் காவலர் வாகனத்தில் கடைசியாக அமர்ந்திருந்த நபரை விரட்டிச்சென்று பிடித்தார். இதில், சுதாரித்துக்கொண்ட அந்த நபர் ஜீவிதாவின் கையை தட்டிவிட்டு தப்ப முயன்ற போது பணப்பையை சாலையில் விழுந்தது. அதேநேரத்தில், அந்த மர்ம நபரின் செல்போனும் கீழே விழுந்தது. திருடர்கள் மூவரும் சத்துவாச்சாரி வழியாக மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். பணப்பை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தப்பிய திருடர்கள் விட்டுச்சென்ற செல்போனைவைத்து மூன்று பேரையும் கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பைக்கில் தப்ப முயன்ற திருடர்களை விரட்டி சென்று பணத்தை மீட்ட *காவலர் ஜீவிதாவுக்கு பாராட்டுக்கள்!*
No comments:
Post a Comment