Thursday, December 16, 2021

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல????!!!

 இது கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த இன்சிடென்ட், எனக்கு ஒரு பொண்ணு பாத்தாங்க,நல்ல குணம் , அழகாவும் இருந்தார் , ஜாதகம் பொருத்தம் இருந்துச்சு. ஆனா நான் வேணாம்னு சொல்லிட்டேன்..

ஏதேச்சையா அந்த பொண்ணோட அப்பா அம்மாவை ட்ரெயின் ல பாத்தேன். ஏன் பா புடிக்கல சொல்லிட்ட உன்ன நல்லா பாத்துக்குவோம் ஏன் வேணாங்குறனு கேட்டாங்க. நான் பதில் எதுவும் சொல்லாம இல்லைங்க வேற பாருங்க உங்க பொண்ணு மேல குறை ஒன்னும் இல்லனு சொல்லிட்டு கெளம்ப பாத்தேன்.
அவங்க என்ன விடாம , நீங்க காரணம் சொன்னாத்தான் விடுவோம்னு அடம்பிடிச்சுட்டாங்க. அப்றம் தான் சொன்னேன் , உங்க பொண்ணு பேரு தான்ங்க காரணம்னு சொன்னேன்.
அதிர்ச்சில அவங்க என் பொண்ணு பேருக்கு என்ன கொறைச்சல்னு கோவப்பட ஆரம்பிச்சுட்டாங்க. நான் இல்லைங்க உங்க பொண்ணு பேரு 'மது'மிதா .
பெயரளவுல கூட மதுன்ற வார்த்தைய பயன்படுத்தாத கூட்டத்தை சேர்ந்தவங்க நாங்க , இப்ப ஒரு தடவை அந்த பெயரை சொன்னதுக்கே குற்ற உணர்ச்சில ஒரு வாரம் தூக்கம் வராது. உங்க பொண்ண கட்டிகிட்டு எப்டிங்க தினம் தினம் உச்சரிக்க முடியும். ப்ளிஸ் வேற பையன பாத்துகிடுங்கனு சொன்னேன்.
அவங்க ரெண்டு பேரும் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டுட்டு கெளம்புனாங்க. இனிமேலயாவது பெத்தவங்க பிள்ளைங்களுக்கு பெயர் வைக்குறப்ப எங்களை மாறி டீடோட்டலர்ஸை மனசுல வச்சுகிட்டு பெயரை வைங்க ப்ளிஸ். 🙏
May be an image of 3 people and text that says "RAJ VIDEO VISION மது எப்ப பாத்தாலும் எனக்கு நீ தடங்கலாவே இருந்துட்டு இருக்க!!"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...