திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் பதவிகளும், இ.கம்யூ., மா.கம்யூ., வி.சி.க., மதிமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மேயர்களின் புகைப்படங்களும் கீழே அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள மொத்தம் 138 நகராட்சிகளில், 132ஐ பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. அதேபோல, மொத்தம் உள்ள 490 பேரூராட்சிகளில், 435 தி.மு.க., வசம் வந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 1,373 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,842 நகராட்சி கவுன்சிலர்கள், 7,604 பேரூராட்சி கவுன்சிலர்கள் நேற்று (மார்ச் 2) பதவியேற்றனர்.
நாளை (மார்ச் 4) 21 மேயர், துணை மேயர்; 138 நகராட்சி தலைவர், துணைத் தலைவர்; 489 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் என, மொத்தம் 1,296 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இப்பதவிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு மாநகராட்சி துணை மேயர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் திமுக தன் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
திமுக வேட்பாளர்கள்:
சென்னை மாநகராட்சி மேயர் - ஆர்.பிரியா, துணை மேயர் - மு.மகேஷ் குமார்.
மதுரை மாநகராட்சி மேயர் - இந்திராணி
திருச்சி மாநகராட்சி மேயர் - மு.அன்பழகன், துணை மேயர் - திவ்யா தனக்கோடி
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் - பி.எம்.சரவணன், துணை மேயர் - கே.ஆர்.ராஜூ
கோவை மாநகராட்சி மேயர் - கல்பனா, துணை மேயர் - வெற்றிச்செல்வன்
சேலம் மாநகராட்சி மேயர் - ஏ.ராமச்சந்திரன்
திருப்பூர் மாநகராட்சி மேயர் - என்.தினேஷ் குமார்
ஈரோடு மாநகராட்சி மேயர் - நாகரத்தினம், துணை மேயர் - செல்வராஜ்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் - என்.பி.ஜெகன், துணை மேயர் - ஜெனிட்டா செல்வராஜ்
ஆவடி மாநகராட்சி மேயர் - ஜி.உதயகுமார்
தாம்பரம் மாநகராட்சி மேயர் - வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் - ஜி.காமராஜ்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் - மகாலட்சுமி யுவராஜ்
வேலூர் மாநகராட்சி மேயர் - சுஜாதா அனந்தகுமார், துணை மேயர் - சுனில்
கடலூர் மாநகராட்சி மேயர் - சுந்தரி
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் - சண்.ராமநாதன், துணை மேயர் - அஞ்சுகம் பூபதி
கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் - தமிழழகன்
கரூர் மாநகராட்சி மேயர் - கவிதா கணேசன், துணை மேயர் - தாரணி பி.சரவணன்
ஒசூர் மாநகராட்சி மேயர் - எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் - சி.ஆனந்தைய்யா
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் - இளமதி, துணை மேயர் - ராஜப்பா
சிவகாசி மாநகராட்சி மேயர் - சங்கீதா இன்பம், துணை மேயர் - விக்னேஷ் பிரியா
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் - மகேஷ், துணை மேயர் - மேரி பிரின்சி
இதேபோல், திமுக சார்பில், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ்:
கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சார்பில் கே.சரவணன் மேயராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:
காங்கிரஸ்: கும்பகோணம் மாநகராட்சி மேயர், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர், 6 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத் தலைவர் மற்றும் 8 பேரூராட்சி தலைவர், 11 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூ.,: மதுரை மாநகராட்சி துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூ.,: திருப்பூர் மாநகராட்சி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 4 நகராட்சி துணைத் தலைவர், 4 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க.,: ஆவடி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 3 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வி.சி.க.,: கடலூர் துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 7 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திண்டிவனம் நகராட்சி துணைத்தலைவர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.இதில் தலைவர் பதவி திமுகவிற்கும் என்ற நிலையில் துணைத்தலைவர் பதவி விடுதலை சிறுத்தை கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், திண்டிவனம் திமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லியாளம் நகர மன்ற தலைவர்
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகரமன்ற தலைவர் பதவி பழங்குடியின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நெல்லியாளம் நகராட்சி தலைவர் பதவிக்கு பழங்குடியின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த சிவகாமியை தலைவராக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment