ஒரு மனிதன் தன் மனைவியை அடித்தான்..
எதிர்பாராத விதமாக அடிக்கும் போது தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டாள்...
இந்த விஷயம் ஊரெங்கும் பரவிவிடும் என்று பயந்து, தனக்கு தெரிந்த ஒருவரிடம் நடந்ததை சொன்னான், அவர் அவனிடம் சூழ்ச்சிகரமான ஒரு தந்திரத்தை சொன்னார், அதாவது வீதியில் ஆளரவம் இல்லாத போது யாரேனும் அழகான இளைஞன் வந்தால் அவனை உன் வீட்டுக்கு அழைத்து கொன்று விட்டு உன் மனைவியையும் அந்த இளைஞனையும் ஒன்றாக சேர்ந்து வைத்து இருவரும் தவறு செய்துக் கொண்டு இருந்தார்கள், அச்சமயம் வந்த நான் அவர்கள் இருவரையும் பார்க்கும் போது ஆத்திரத்தில் கொன்று விட்டேன் என்று உன் மனைவியின் குடும்பத்தாரிடம் சொல்லு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்..
அந்த கொலையாளி தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு இருந்தான், அந்நேரத்தில் வீதியில் ஆளரவம் இல்லாத போது மெலிந்த தோற்றம் கொண்ட அழகிய இளைஞன் வந்தான், அந்த கொலையாளியின் சூழ்ச்சியால் அந்த இளைஞன் அவன் விரித்த சூழ்ச்சி வலையில் சிக்கினான், எப்படியோ வீட்டுக்கு வரவழைத்து வீட்டுக்குள்ளே வந்தவுடன் அந்த இளைஞனைக் கொன்று விட்டான்..
அந்நேரம் பார்த்து இந்தக் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிக்கொடுத்த அந்த மனிதனின் மகன் வழக்கம் போல் அன்று வீட்டிற்கு வரவில்லை, அவரின் மனதில் குழப்ப ரேகைகள் ஓட ஆரம்பித்தது, உடனே விர்ரென்று அந்தக் கொலையாளியின் வீட்டிற்க்கு சென்றார், அங்கு சென்று அவரிடம் நான் வகுத்து தந்த திட்டத்தை நிறைவேற்றிவிட்டாயா என்று கேட்டார்..??.
அதற்கு அவர்: ஆம்..!
அந்த மனிதர்: நீ கொலை செய்த அந்த இளைஞனின் முகத்தை எனக்குக் காட்டு என்றார்..
முகத்தை திறந்து காட்டப்பட்டது, அந்த இளைஞனின் முகத்தை பார்த்தவுடன் அவரின் மனம் உடைந்துவிட்டது, தான் பின்னிக் கொடுத்த சூழ்ச்சி வலையில் தன் மகனே விழுந்துவிட்டானே என்று அவர் மனம் துயரத்தில் மூழ்கி தவித்தது, ஆம்..! ஏனென்றால் அங்கே இருந்தது அவரின் மகன்..
அவர் தமக்கை செய்த வினையால் அவர் தன் மகனை இழந்தார் எனவே நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதைத்தான் அறுவடை செய்வீர்கள்,
தன்வினை தன்னை சுடும்...
யார் ஒருவன் மற்றவர்களுக்கு குழி தோண்டுகிறானோ அதில் அவனே விழுவான் என்றார்கள்..
பிறருக்கு தீங்கு நினைத்தால் அதற்கான விளைவுகளை நாமே சந்திக்க நேரிடும்..
மற்றவர்களுக்கு தீங்கு செய்வதிலிருந்து தவிர்ந்துக் கொள்வோம்...!
No comments:
Post a Comment