சமீபத்தில் நடந்த தி.மு.க., அலுவலக திறப்பு விழாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.
பல கேள்விகள்
கடந்த 2ம் தேதி, டில்லியில், 'அண்ணா - கலைஞர் அறிவாலயம்' என்ற பெயரில், புதிதாக கட்டப்பட்ட தி.மு.க., அலுவலகத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவ்விழாவில், காங்., தலைவர் சோனியா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு - காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதில், ராகுல் பங்கேற்காதது பல கேள்விகளை எழுப்பியது. இதுமட்டுமல்லாமல், அந்த விழாவில், மேலும் கூத்துகளும் அரங்கேறின. விழாவுக்கு, திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா வந்தபோது, அவரை ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்திய ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா, 'வங்கப் புலி' என குறிப்பிட்டார். இதைக் கவனித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த காங்., - எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுப்பானதாக கூறப்படுகிறது.
இதேபோல், விழாவுக்கு அகிலேஷ் யாதவ் வந்தபோது, அவரை சிரித்த முகத்துடன் வணக்கம் தெரிவித்து வரவேற்ற சீதாராம் யெச்சூரி, மஹுவா மொய்த்ரா வந்தபோது முகத்தை திருப்பிக் கொண்டதாக கூறப்படுகிறது.
சந்தேகம்
லோக்சபா எம்.பி., கனிமொழியின் நெருங்கிய தோழியாக கருதப்படும், தேசியவாத காங்., - எம்.பி., சுப்ரியா சுலே, இந்த விழாவில் பங்கேற்கவில்லை. அக்கட்சி எம்.பி.,க்கள் ஒருவர் கூட, அதில் பங்கேற்காதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment