Wednesday, April 13, 2022

வாழ்வதற்குப்_பிறந்தோம்...

 நாம் வாழ்வதற்குப் பிறந்தோம் என்று சொல்கிறோம். இந்த வாழ்க்கை என்றால் என்ன? இதை நாம் எப்படி அமைத்துக் கொண்டால் வெற்றி பெறலாம் என்ற வழிமுறைகளைத் தெரிந்து அதன்படி நாம் வாழ வேண்டும்.

வாழ்க்கை என்பது குடை போன்றது. அதில் வெயிலும், மழையும் உண்டு. மேடுகளும், பள்ளங்களும் கலந்தது தான் வாழ்க்கை.
இதில் சுகங்களை மட்டுமே அனுபவித்து வாழ்ந்தால் விரைவில் சலிப்பு ஏற்பட்டு விடும்.
சோகங்களை மட்டும் அனுபவித்து வாழ்ந்தால் விரைவில் தளர்ச்சி ஏற்பட்டு விடும்.
இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் ? என்று ஒரு அறிஞரிடம் கேட்டதற்கு செயல் விளக்கம் கொடுத்தார்.
மேஜையில் மூன்று கண்ணாடிக் குவளைகளை தண்ணீருடன் வைத்தார். அதற்குப் பக்கத்தில் மூன்று பொம்மைகளையும் வைத்தார்.
முதல் பொம்மை களிமண்ணாலும், இரண்டாவது பொம்மை பஞ்சாலும், மூன்றாவது பொம்மை சர்க்கரையால் செய்யப்பட்டவை..
முதல் பொம்மையை எடுத்துத் தண்ணீரில் போட்டார். அது தானும் கலங்கி தண்ணீரையும் கலக்கி அசுத்தப்படுத்தி விட்டது.
இவர்கள் தன்னையும் கலக்கி மற்றவர்களையும் கலக்கி விடுவார்கள். இவர்கள் குழப்பவாதிகள்,
இரண்டாவது பொம்மையை எடுத்து தண்ணீரில் போட்டார். இது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி விட்டது.
பக்கத்தில் இருப்பவர்கள் தனக்கு மட்டும் வேலை செய்தால் போதும் என்று நினைப்பவர்கள்.. இவர்கள் சுயநலவாதிகள்..
மூன்றாவது பொம்மையை எடுத்துத் தண்ணீரில் போட்டார். இது தண்ணீரில் கரைந்து தண்ணீரை சுவையாக்கி விட்டது.
மற்றவர்களுக்கு சேவை செய்து, மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். இவர்கள் பொதுநலவாதிகள்..
மூன்றாவது வகை மனிதர்களைப் போல் வாழ வேண்டும் எனக் கூறினார்.
வாழ்க்கை ஒரு வாய்ப்பு. அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு சவால். அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு தீரச்செயல். அதைச் சாதித்துக் காட்டுங்கள்.
வாழ்க்கை ஒரு போராட்டம்.அதை வென்று காட்டுங்கள். .
வாழ்க்கை ஒரு கடமை. அதை நிறைவேற்றிக் காட்டுங்கள்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
வாழ்த்துக்கள்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...