Wednesday, April 13, 2022

'சுயநலம்'..!!

 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


💗இன்றைய சிந்தனை...


'சுயநலம்' ஒரு தொற்று வியாதி என்றும் கூறலாம். 


சுயநலவாதிகளோடு உறவு கொள்பவர்கள் தம்மை அறியாமலே அக்குணம் தம்மை பிடிக்க விட்டு விடுவார்கள். 


சுயநலம் மனதை இருட்டாக்கி விடும். சுற்றி இருப்பவர்களை வெறுக்க வைத்து விடும். சுயநலம் நல்ல குணம் அல்ல.


சுயநலம் கொண்டவர்களிடம் தன்னை விட மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்து தவிப்பார்கள். இன்று பெரும்பாலானவர்கள் அதிகப் படியான மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சுயநலமும் ஒரு காரணம். 


சுயநலம் அதிகம் கொண்டவர்கள் தன் வளர்ச்சியை பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியை பற்றி பொறாமை பட்டுக்கொண்டு அவர்களுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தான் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள்.


எவ்வளவு தான் வேண்டப்பட்டவர்களாக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், ஏன் அண்ணன், தம்பியாக இருந்தாலும் கூட, அவர்கள் நம்மை விட ஒரு படி மேலே போய் விடக் கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள்” என்பது தான். 


இந்த எண்ணம் உங்களிடமும் இருந்தால் நீங்கள் சுயநலத்திற்கும், பொறாமைக்கும் ஆட்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.


பாராட்டு என்பது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. மற்றவருக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் சுயநலக்காரர்கள் கவனமாக இருப்பார்கள். 


பேராசை, அந்தஸ்தை உயர்த்த வேண்டும், குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் போன்ற எண்ணம் கொண்டவர்கள் பெரும்பாலும் சுயநலப் போக்கு உள்ளவர்கள்..


இந்த மனநிலை அவர்களை மன இறுக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும். ‘எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்’ என்ற நல்ல எண்ணத்தை, சுயநலம் மறைத்து விடுகிறது. 


நம் மனதின் உள்ளே இருக்கும் சுயநலம் வெளிப்படும் போது நாம் மற்றவர் பார்வைக்கு அசிங்கமாக தெரிவோம். இந்த சுயநலத்தின் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியை கொன்று விடும். இப்படித்தான் பொறாமை உணர்வு வந்து விட்டால், அதனை பல காலம் அமுக்கி வைக்க முடியாது. 


எப்படியாவது அது வெடித்துச் சிதறி வெளியே வந்து கடுமையான பின் விளைவுகளை உருவாக்கி விடும். மற்றவர்களுக்கு உதவ நமக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இன்று நிறைய பேர் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள்.


சொல்லப் போனால், இந்த உலகமே இப்போது சுயநலத்தில் தான் சுழன்று கொண்டு இருக்கிறது...


இன்றைய நாளில் தனக்கு எது கிடைத்தாலும், அதனால் எனக்கு என்ன ஆதாயம்? அதை வைத்துக் கொண்டு எப்படியாவது உலகத்துப் பணத்தை எல்லாம் சுருட்டித் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள முடியுமா? என்று ''சுயநலம்'' கொண்டு பலர் அலைவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.


ஆம்.,நண்பர்களே..,


இன்றைக்கும் எந்தவித சுயநலமும் இல்லாமல் பொதுநல சிந்தனையோட, ஈர இதயங்கள் ஆங்காங்கே பலர் இருப்பதால் தான், இந்த சமூகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அன்னதானம், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் வரை நடந்துக் கொண்டே இருக்கிறது..சுயநலம் தவிர்ப்போம்.. பொதுநலம் கொண்டு மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்..!!


💗வாழ்க வளமுடன்💗


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...