மணித்தக்காளிஊர் பகுதிகளில் எளிமையாக கிடைக்கக் கூடிய மணி(ண)த்தக்காளி கீரையின் தண்டு, கீரை, பழம், அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது.
மணித்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், கால்சியும், இரும்புச்சத்து, வைட்டமின் "எ", "பி" உள்ளது.
மணித்தக்காளி காயை, சுண்டக்காயை போல வற்றல் செய்து சாப்பிடலாம். இதனை குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.
உடலிலுள்ள சளியை நீக்குவதோடு இருமல், மூச்சிரைப்பிற்கு குணம் தருகிறது. காச நோய் இருப்பவர்கள் இந்த மணத்தக்காளி கீரையின் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. பசுமையான இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.
மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வலிமை பெறும்.
உடல் வெப்பம், நாக்கில் புண், குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
மணத்தக்காளி கீரையை விளக்கெண்ணையில் வதக்கி பற்று போட்டால் மூட்டு வீக்கங்கள் குணமாகும். தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இதை சாப்பிடலாம்.
மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது.
கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்.
No comments:
Post a Comment