Monday, April 4, 2022

கர்மா என்பது.......

 1) நல்லவர்களாக இருந்து, யாருக்கும் எந்த கெடுதலும் செய்யக்கூடாது என உளமாற நினைத்து வாழ்பவர்களுக்கு தொடர்ந்து அடுத்தவர்கள் மூலமாக சோதனைக்கு மேல் சோதனைகளாக வந்து கொண்டே இருந்தால்,

2) அதிகப்படியான செல்வத்துடனும் செல்வாக்குடனும் வாழ்ந்து, அவற்றையெல்லாம் தன்னை அறியாமலேயே தன் வாழ் நாளிலேயே இழக்க நேரிட்டால்,
3) நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து, தீடிரென உடலை சீரழிக்கும் கொடிய நோய்வாய்ப்படுதல், அல்லது உடல் உறுப்புக்களை இழத்தல்,
4) எல்லா வசதி வாய்புகளும் இருந்தும், மன நிம்மதி இல்லாமல் தவித்தல்,
5) குடும்ப பாங்கான, மனைவி மக்கள் என வாழ்கை அமைந்தும், மனம் எந்நேரமும் இறைவனை நாடி தேடிக் கொண்டே குடும்ப பற்றில்லாமல் போவது,
6) எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும், எவ்வளவு சிரத்தையாகவும் சிறப்பாகவும் செய்தும், தொடர் தோல்விகள் மட்டுமே பலனாக கிடைப்பது,
7) அண்ணன் தம்பி என உடன்பிறப்புகளே எதிரியாக மாறுவது,
😎 சுயநலமிக்க, தான்தோன்றித்தனமாக, பொறுப்பற்ற பிள்ளைகள் , திருட்டுத்தனமான மனைவி, என அமைவது,
இப்படி எத்தனையோ பிரச்சினைகள் நாம் எதிர்பார்க்காமலேயே நம்மை தாக்கி, வாழ்கை நமது கட்டுப்பாட்டை மீறி அது ஒரு பக்கம் நம்மை இழுத்து செல்வதை, நகர வேதனை படுவதை, ஒன்றும் செய்ய முடியாமல் அனுபவிக்க நேரிடும் போதுதான்,
இதெல்லாம் கர்ம விணை, அனுபவித்தே தீர வேண்டும் என்ற விரக்தி நிலைக்கு வரும் போது தான், பாவங்கள் செய்வதால், இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, முன் ஜென்மத்து கணக்கும், அடுத்த ஜென்மத்து கணக்கும் எல்லாம் யாரோ ஒருவன் கண்காணித்து, கர்ம பலன்களை தீர்மானிக்கின்றான், அவனது கணக்கு படி தான் எல்லாம் நடக்கின்றது என்பதை உணருவோம்.
இந்த ஞானத்தை தான் நமது முன்னோர்கள் நமக்கு பழக்கப்படுத்த முனைந்தார்கள்,
வாழ்கை முறையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வழிமுறைகளை வகுத்து தந்தார்கள்.
ஆனால் நாம் எல்லாவற்றிலும் பகுத்தறிவும், பொதுஉடமையும், சமநிலையும் பேசிப் பேசியே, நமது வாழ்வியல் கலாச்சாரத்தை குலைத்து, இவற்றையெல்லாம் வரவழைத்துக் கொண்டோம்.
இதை எப்படி வேண்டுமானாலும் விவாதிக்கலாம், நியாயப்படுத்தலாம், குறை கூறலாம். சிலர் இவற்றையெல்லாம் புறம் தள்ளி, நமது பண்பாட்டை எள்ளி நகையாடலாம்.
ஆனால் மேலே குறிப்பிட்ட, வாழ்கையில் உண்மையில் பாதிக்கப்பட்ட நபர்களை கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் தாங்கள் உணர்ந்த உண்மையை.
இவையெல்லாம் விவாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், ஆனால் காரணமே தெரியாமல், எதிர்பார்க்கவே முடியாத, தகுதியே இல்லாத கஷ்டங்கள் வந்து வதைக்கும் போது, அதுவரை விவாதித்தவர்கள் கூட, எதிர்தவர்கள் கூட, இத்தகைய கஷ்டங்களுக்கு உட்படும்போது, அவற்றை அனுபவிக்கும் போது இதை உணராமல் போக மாட்டார்கள்.
கர்மவினையும், கர்மபலனும், கர்மயோகமும் எல்லாம் இருப்பது அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே உணர முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...