Tuesday, April 5, 2022

*முதல்வரின் முகவரி* துறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள்.

 1. மக்கள் அளிக்கும் புகார் மனு ஏற்கப்பட்டது / நிராகரிக்கப்பட்டது என்பது மட்டுமே இணையத்தளத்தில் உள்ளது. அதிகாரிகள் அளித்த பதிலை காண வேண்டுமாயின், தனியாக புகார் எண்ணை பதிவு செய்து காண வேண்டி உள்ளது. அதற்கு பதில், cmcell இல் ஏற்கனவே இருந்தது போல், அதிகாரிகளின் பதிலையும் புகாருடன் சேர்த்து காணும் வசதியை உருவாக்க வேண்டுகிறோம்.

2. பெரும்பாலான அரசு அதிகாரிகள் மக்கள் அளிக்கும் மனுவின் எந்த நடவடிக்கையும் எடுக்காமலே, நடவடிக்கை எடுக்கப்படும் என புகார்களை மூடி விடுகின்றனர். அவ்வாறான புகார்களை மேல்முறையீடு செய்ய மனுதாருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். தற்போது நிராகரிக்கப்படும் புகார்களை மட்டுமே மேல்முறையீடு செய்ய முடிகிறது.
3. மக்களின் புகார்களை சரிவர நிவர்த்தி செய்யாத அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
4. அதிகமாக துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் அல்லது நிரந்தர பணிநீக்கம் செய்தால் மட்டுமே அரசு நிர்வாகத்தை சீர்திருத்த முடியும்.
5. ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள். மக்களுக்கு சேவை செய்யவே அரசு அதிகாரிகள். அரசு அதிகாரிகளுக்கு அவர்களின் சேவையை பொறுத்து ரேட்டிங் அளிக்கும் வசதியை கொண்டு வரலாம். இதன் மூலம் தனக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரி என்ன ரேட்டிங் பெற்றுள்ளார் என்பதை மக்கள் பார்க்க முடியும்.
மேற்கூறிய வசதிகளை முதல்வரின் முகவரி துறை இணையத்தளத்தில் கொண்டு வர வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...