Tuesday, April 5, 2022

அந்த காலத்திலே எப்படி வெய்யிலை சமாளிச்சு வாழ்ந்திருப்பாங்க?

 மரம் நெறையா இருந்திருக்கும் தான் ஆனாலும் வெய்யில் என்பது நகரங்களிலே இருந்திருக்கும் தானே?

எளிய வழிமுறைகள் மூலம் தான்.
வீடு கட்டும்போது மண் சுவரை இரண்டு அடி வரைக்கும் கட்டுவாங்க. சில சமயங்களிலே இரண்டரை அடி வரைக்கும் இருக்கும்.
பல இடங்களிலே ஒடக்கல் கொங்கு பகுதியிலே சொல்லப்பட்டும் சுண்ணாம்புக்கல் வைச்சு கட்டுவாங்க. இந்த கல் ஓட்டை ஒட்டையா இருக்கும் ஆனா உறுதியா இருக்கும்.
நடுவிலே ஓட்டை இருப்பதால் வெப்பம் கடத்துதல் திறன் குறைவாக இருக்கும்
இதனாலே வெளியிலே இருந்து வெப்பம் உள்ளே வராது.
ஆனால் மேலே இருந்து வெப்பம் வருமே. ஓலைக்கூரை அல்லது ஓட்டுக்கூரையாக இருந்தாலும் வெப்பம் வருமே அப்படீன்னா
அதுக்கு கூரையை நல்ல உயரமாக போடுவாங்க. இருபது அடிக்கும் மேலே போடுவாங்க. அதாவது மூனு ஆள் உசரத்துக்கும் மேலே. போட்டுட்டு அங்கே கொஞ்சம் காற்று போக வழி செய்வாங்க.
கீழே இருக்கும் வெப்பக்காத்து மேலே போய் அது வழியா போயிடும். உயரமாக இருப்பதால் கீழேயும் மேலேயும்
இரண்டுக்கும் இடையே இருக்கு சிறூ அழுத்த வித்தியாசத்தால் காத்து போகும்போது கொஞ்சம் வெப்பத்தையும் கடத்து கீழே குளிர்ச்சியாக்கிடும்.
இது எப்படீன்னு நீங்களே பரிசோத்துச்சு பார்க்கலாம். வீட்டிலே ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டிலே தண்ணியை பிடிச்சு வைச்சா வெய்யில் காலத்திலேயும் பக்கெட் தண்ணி சில்லு இருக்கும். இதான் காரணம்.
நம்முடைய கோவில் கருவறைகளே இப்படி குளிர்விக்க கட்டப்பட்டவைதான்.
யோகசாதனை செய்வோருக்கு என்றே இருந்த இடங்கள் நம்முடைய கோவில்கள்
இத்தோடு வீதிகளை கொஞ்சம் அகலமாக விட்டு வீட்டுக்கு வீடு கொஞ்சமேனும் இடைவெளி விட்டிருப்பார்கள். காற்று போக வசதியாக.
ஓட்டுக்கூரையுமே கையோடு என போட்டால் அதன் அடுக்குமுறையே வெப்பம் உள்ளே வராமல் செய்யும். ஒன்றுக்கு ஒன்று சிறு இடைவெளி விட்டு ஒரு அடிக்கு பத்து பன்னிரெண்டு கையோடு அடுக்குவார்கள். இப்போது அந்த திறனே போய்விட்டது.
இப்படி வாழ்ந்த நாம் இப்போது என்ன செய்கிறோம்?
அரையடி செங்கல் கொண்டு பொட்டி பொட்டியா புறாக்கூண்டா வீட்டை கட்டிட்டு
ஏசி போட மாதம் பல ஆயிரக்கணக்கிலே செலவு செய்கிறோம்.
சும்மா வெளியே வந்தாலே அப்படியே வேர்த்து ஊற்றுது.
இதையெல்லாம் படிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ இங்கே கூடாது.
ஏன்னா வெள்ளக்காரன் வரும் முன்னர் நாம தான் கோவணம் கட்டக்கூட தெரியாம இருந்தோமே?
சாதிவழியா தொழில் செஞ்சது எல்லாமே தப்பாச்சே
இந்த அறிவுடன் தொழில் செஞ்ச எல்லா சாதிகளையும் இழிவாக பேசி அவிங்க போதும்டா சாமி உங்க பிரச்சினையே வேண்டாம் என விட்டுட்டாங்க.
அப்புறம் யாரு இதையெல்லாம் யோசிக்க வருவாங்க?
வெள்ளைக்காரன் காட்டிய வழிய அப்படியே ஈயடிச்சான் காப்பியடிச்சா போதுமே?
பொட்டி பொட்டியா வீட்டை கட்டி வித்தமா காசை வாங்கினமா அப்படீன்னு போயிட்டா பிரச்சினை இல்லைன்னு எல்லோரும் போயிடறாங்க.
இதுல அறிவியல் வளரல ஆராய்ச்சி செய்யல புதுசா கண்டுபிடிக்கல அப்படீன்னு கூப்பாடு வேற.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...