Wednesday, April 6, 2022

அரசியல் ரீதியாக பலருக்கும் இலங்கை விஷயம் தெரியவில்லை.

 சீனப்போர் காலம் தொட்டு மதில்மேல் பூனை cat on the wall என இலங்கை நம்மீது இரட்டை வேடம் போட்டது. திரிகோணமலையில் அமெரிக்கா தளம் என இந்திய பெருங்கடல் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு இலங்கை துணை போனது. மாற்றி யோசித்த இந்திராகாந்தி விடுதலைப்புலிகளை உருவாக்கி அங்கு பிரச்சனையை உருவாக்கினார். மறுபுறம் கச்சத்தீவை கொடுத்து உலக அரங்கில் இலங்கையுடன் நட்பாகத்தான் உள்ளோம் என ராஜதந்திரம் செய்தார். ஓரு நாட்டின் கடல் எல்லை என்பது 18 கடல் கிலோமீட்டர் தூரம். அவ்வகையில் கச்சத்தீவு நம் கடல் எல்லைக்குள்தான் இருக்கிறது. மேலும் சேதுபதி சமஸ்தானம் இந்தியாவிற்கு மட்டுமே என நிபந்தனை செய்து தீவைக் கொடுத்தது. கச்சத்தீவை கொடுப்பது செல்லாது என நன்றாக தெரிந்தே தேசபக்தியுடன் கொடுத்தார். விடுதலைப்புலிகள் நமக்கு எதிராக 1991ல் நிலைப்பாடு எடுத்ததும் அத்தோடு அந்த இராஜதந்திரம் பிரச்சனை முடிந்தது. அதன்பின் இந்திராகாந்தி போல் இராஜதந்திரியான எங்கள் புரட்சித்தலைவி கச்சத்தீவு மீட்பு என முழு ஆவண ஆதாரப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஏற்பாடு செய்தார். அதற்கு இந்த சோனியா காங்கிரஸ், பிஜேபி அரசுகள் இருநாட்டு ராஜ்ய உறவு என தட்டிக்கழித்து வந்தன. வழக்கு எண் கூட பதிவிடவில்லை. இந்த பிஜேபி 2014ல் மோடி பதவியேற்பு விழாவில் ராஷபக்ஷே கலந்து கொண்டனர். அதை தமிழக முதலமைச்சர் என்ற தலைமைப் பொறுப்பில் முழுமையான எதிர்ப்பு/கண்டனம் தெரிவித்தார்.

திமுக விசிக சோனியா காங்கிரஸ் பற்றி கூறவே வேண்டாம். இவர்கள் ராஷபக்ஷே கொடுத்த வரவேற்பில் கலந்து பரிசுகள் பெற்றனர். ஜெகத்ரட்சகன், ரஜினிகாந்த் போன்றவர்கள் வியாபார தொடர்புகள் உள்ளவர்கள்.
இன்று நிலைமை வேறு. இலங்கை சோறு இல்லாமல் நாறிப்போய் கிடக்கிறது. இச்சூழலில் சுண்டெலி கச்சத்தீவு மட்டுமல்ல இலங்கையையே நாம் நமது மாநிலமாக கைப்பற்றும் ஆதாய சூழல் உள்ளது. எனவே உங்களின்/மத்திய அரசின் கச்சத்தீவு மீட்பு பேச்சுவார்த்தை ஒரு சாதனையல்ல.
அமெரிக்கா ரஷ்யா வடகொரியா சீனா போன்ற வல்லரசு எனப் போலியாக கூறிக்கொள்ளும் நீசநாடுகளின் இந்திய பெருங்கடல் ஆக்கிரமிப்பு முயற்சியிலிருந்து இலங்கை தப்பவே முடியாது. இப்பொது ஓய்ந்து போய் உள்ளது. இவ்வேளையில் இந்திராகாந்தி ஜெயலலிதா போன்றவர்கள் பிரதமராக இருந்தால் அவர்களின் நிலைமை/ராஜதந்திரம் வேறாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...