சுமை அதிகமாகத் தோன்றத்தோன்ற, நீங்கள் மேலே ஏறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.
நம்மைக் கடுப்பேற்ற முயற்சிப்பவரிடம் அமைதியாக இருந்து அவரை அதிக கடுப்பேற்றி விடுவதில் ஒரு ஆனந்தம் உண்டு.
கேட்டுப் பெறக் கூடாதவை, கேட்டாலும் பெற முடியாதவை மரியாதை, முக்கியத்துவம், காதல், மன்னிப்பு.
எளிமையின் மகத்துவம் உணர்ந்த இதயத்துக்குத்தான் அதன் பிரம்மாண்டமும் புரியும்.
உண்மையான பக்குவம் என்பது யாதெனில்... சந்தோசமும், சிரிப்பும் வேறு வேறு.
ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாக யோசித்தால்.. நம் எதிர்பார்ப்பே தவறு என்று புரியும்.
வலிமை என்பது உடலில் இருப்பதை விட, உள்ளத்தில் இருக்க வேண்டும்.
சிற்றெறும்பு தூக்கும் பாரம் அதிகம் தான், சுய பாதுகாப்புக்கு இலகுவாக தூக்கி செல்கிறது.
சிட்டுக்குருவி கூட தன் வீட்டை, தானே கட்டிக் கொள்கிறது.
வல்லமை கொண்ட மனிதப் பிறவி நீங்கள் வலிமை உங்கள் உள்ளத்தில் இருந்தால் வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment