மறக்க வேண்டியதை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியதை மறந்து விடுவதும், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாததைச் செய்து முடிப்பதுமே நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலானோர் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம்.
எதிர்பார்ப்புகள் பல நேரங்களில் ஏமாற்றங்களையே தரும். கடமையைச் செய்து பலனை எதிர்பாராமல் இருப்பதே அநேக அற்புதங்களுக்கு வழிவகுத்திடும்.
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைக் கடந்து போகக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் மறந்து போய் விடாதீர்கள். அதுதான் உங்கள் வாழக்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்.
எதற்காகவும் அவசரப்படாதீர்கள் நேரம் வரும் போது தானாகவே அது நடந்தேறும்.
மனித மனம் அமைதியைத் தேடி அலைகிறது. அது எங்கே கிடைக்கும் என்றும் அலைகிறது.
ஏனெனில் அமைதியாக இருக்கிற போது தான் மனம் நிம்மதியாக இருக்கிறது. நிறைவாக உணர்கிறது.
ஒரு அமைதியான சூழலில் நிம்மதியாகவும், அமைதியாகவும் இருப்பது எளிது.
ஆனால். மிகவும் சத்தமான மற்றும் கூட்டமான இடங்களில் அமைதியைத் தேடுவது கடினம்.
நாம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வெளியில் தேட வேண்டிய அவசியமில்லை. நம்முள்ளேயே தேடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நம்முள்ளேயே உறைந்திருக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் நாம் கண்டுபிடித்தால் வெளிப்புறச் சூழ்நிலை நம்மைப் பாதிக்காது.
சிலநேரம் நாம் அனைவரும் ஆசை, காமம் பற்றித் தேவையற்ற சிந்தனைகளால் மனதின் அமைதியைக் கெடுக்கிறோம்.
மனதை அமைதிப்படுத்த அதன் போக்கிலேயே சென்று வெல்வதே எளிமையான வழியாகும். அதனைச் செய்ய மனதை இனிமைப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment