தற்பெருமையும், சுயநலமும் எப்படிப்பட்ட உறவுகளையும் அழித்து விடும். தற்பெருமைக்கும், சுயமரியாதைக்கும் வேறுபாடு ஒரு நூலளவே. தற்பெருமை தன்னை மட்டுமே நினைக்க செய்யும். சுயமரியாதை மற்றவர்களையும் கௌரவிக்க செய்யும்.*
*ஒருவரின் செயல் பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பார்த்து கோபப்படுவதை விட. அவர்களுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை படிப்படியாக குறைத்துக் விடுங்கள்.*
*பந்தயக் குதிரை ஓடும் போது அருகிலுள்ள புல்லையோ, கொள்ளையோ பார்ப்பதில்லை. ஏனெனில் அது தன் வெற்றி இலக்கை மட்டுமே மனதில் கொண்டு ஓடுகிறது.*
*மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அதிக மதிப்பு கூட்டுகிறீர்களோ. உங்கள் வாழ்க்கை அவ்வளவு அதிக சிறப்பாக இயங்கும்.*
*நல்லது செய்வதற்கு உங்களை அர்ப்பணித்து கொள்ளுங்கள். வாழ்விலிருந்து அதிகமாக பெறுவதற்கு வாழ்க்கைக்கு நீங்கள் அதிகமாக கொடுக்க வேண்டும்.*
*ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பலனில்லை.*
*எத்தனை அழகான விளக்கு என்றாலும் பகலில் எரிந்தால் வீண் தான். எத்தனை ஆழமான அன்பாக என்றாலும் தவறான இடத்தில் காட்டினால் வீண் தான்.*
*வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட வாழ்க்கையால் சொல்லும் பதில்களுக்கே வலிமை அதிகம்.*
*பலரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை விட பல சமயங்களில் சமாளித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்பதே உண்மை.*
*நம்பிக்கை இல்லாமல் சிரித்து பேசும் உறவுகளை விட. நம்பிக்கை இல்லை என்று விலகி நிற்கும் உறவுகளே உண்மையானவை.
No comments:
Post a Comment