படிகாரம்,சுண்ணாம்பு தண்ணீர்,மஞ்சள்..
இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும்.
இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை,
*‘ஹரித்ரா குங்குமம்’*
என்று சொல்வார்கள்.
குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்பு சத்தாக மாற்றம் காண்கிறது.
படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது.
தொற்றுநோய்களும் அண்டாது.
மூளைக்கு செல்லும் நரம்புகள்,அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும்.
குங்குமம் அணிவதால் நெற்றியில் சூடு தணிகிறது.பெண்களின் தலை வகிட்டின் நுனியை,
*‘சீமந்தபிரதேசம்’*
என்பார்கள்.
பெண்கள் அணியும் மாங்கல்யம்,
பெண்களின் நெற்றி,
தலை வகிட்டு பகுதி ஆரம்பம்..ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள்.
இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால்,
லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.
மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.
நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால்,
கொடுப்பவர் – பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும்.
பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக,
தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும்.
ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில்,
குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment