அழகிய கண்ணே .. என்று தொடங்கும் பாடலை எப்போது கேட்டாலும் கண்கள் நம்மை அறியாமல் ஈரமாகும் .
உதிரிப்பூக்கள் திரைப்படம் வெளிவந்த வருடம் 1979. கிட்டத்தட்ட 43 வருடங்கள் கடந்து போய் விட்டது அந்த திரைப்படம் வெளிவந்து .(19.10.1979)
இன்று கேட்டாலும் அந்த படத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடல்களும் மனதை என்னமோ செய்கிறது .
சமீபத்தில் இசைஞானி அவர்களின் இசையில் வெளிவந்த 100 பாடல்களை தேடி எடுத்து எழுதினேன் மனைவியின் விருப்பத்திற்காக . 80 - 90 காலகட்டத்தில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் கேட்டு கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள் . அந்த காலங்கள் மனத்திரையில் தோன்றி மறைகிறது .
அப்போதெல்லாம் பாட்டுகள் ரெக்கார்ட்டிங் செய்ய திருவண்ணாமலையில் இரண்டு மூன்று இடங்கள் இருக்கும் . அங்கு நாம் எப்போது சென்றாலும் கூட்டம் நிறைந்தே இருக்கும் . அதிலும் TSM ரெக்கார்ட்டிங் ரொம்ப பேமஸ் அப்போது . நின்று பேச முடியாது .படங்கள் மற்றும் பாடல்களின் பட்டியல் தொகுப்பு அடங்கிய பேப்பர்கள் பின் அடித்து வைத்திருப்பார்கள் . அதில் நமக்கு பிடித்த பாடல்களை எழுதி தந்து வருவோம் . அதை வாங்க நடையாய் நடப்போம் .
அப்போது சிறுவனாக இருந்து எழுதிய நான் ரசித்த பாடல்களை தற்போதும் தேடி எடுத்து ஒலிப்பதிவு செய்ய பட்டியலாக எழுதுகிறேன் . அதில் முதல் பாடலே அழகிய கண்ணே பாடலோடு தான் தொடங்குகிறது .
இன்னும் ஏழு ஆண்டுகள் கழித்து அந்த பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகள் ஆகும் . ஏன் ஒரு நூற்றாண்டுகள் கழிந்து இளைய தலைமுறையினர்கள் அந்த பாடலை கேட்கும் போதும் கண்கள் ஈரமாகும் .
No comments:
Post a Comment