இந்த கஷ்டமான காலத்திலும்...
தவறுதலாகக் கிடைத்த லட்சங்களைத் திருப்பியளித்த சிவகாசிப் பெண்!
வாங்கிய பணத்தையே இல்லை என ஏய்க்கும் இந்தக் காலத்தில்,
ஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக்கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கவனக்குறைவாகக் கொடுத்து விட்ட கடை முதலாளியிடம் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துள்ளார்
தன் நேர்மையால் சிகரமாக உயர்ந்திருக்கும் அவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாச்சிபுரத்தைச் சேர்ந்தவர், சிவசங்கரி.
10 ஆண்டுகளாக டெய்லரிங் தொழிலில் உள்ளார்.
சிவகாசியில் உள்ள வாசன் ஜவுளிக் கடைக்குத் துணி வாங்கச் சென்றிருக்கிறார்.
வீட்டுக்கு வந்து பையை எடுத்துப் பார்த்தால், அதனுள் துணிக்குப் பதிலாகக் கட்டுக் கட்டாகப் பணம்.
மொத்தம், பணம் எட்டரை லட்சம் ரூபாய். உடனடியாகக் கடைக்குச் சென்று திருப்பிக்கொடுத்துள்ளார்.
"அந்தப் பணத்தைக் கடையில் ஒப்படைக்கிற வரை பெரிய பாரமாவே இருந்துச்சு.
அதைக் கொடுத்த பிறகுதான் மனசு லேசு ஆச்சு. இதை அவங்க ஃபேஸ்புக்ல போட்டிருக்காங்க போல. ஆளாளுக்கு போன் பண்ணி பாராட்டுறாங்க. இதுக்கு எதுக்குங்க பாராட்டு? என் சொந்தக் காசையா தானம் பண்ணினேன். உழைச்சுச் சாப்பிடறது போதும்ங்க'' என்கிறார் வெள்ளந்தியாக....
No comments:
Post a Comment