Saturday, May 21, 2022

நடப்பதெல்லாம் நல்லதாக தெரியவில்லை!

 முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையானது, மிகத் திறமையாகவும், விரிவாகவும் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட சதி வேலை. அவரின் படுகொலைக்கு, உலகில் முன்மாதிரியே இல்லை என்று கூறலாம். சம்பவம் எப்படி நடந்தது என்று புரியவே பல நாட்களாயிற்று. கிடைத்தது ஒரே ஒரு புகைப்பட சுருள்.


அதன் வாயிலாக, கார்த்திகேயன் என்ற திறமையான புலனாய்வு அதிகாரியின் கீழ் பணியாற்றிய குழு, அனைத்து விபரங்களையும் வெளிக்கொணர்ந்து, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபித்தது. தற்போது, கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்ததன் வாயிலாக, இரவும், பகலும் துாக்கத்தை தொலைத்து, உண்மையை கண்டறிய வெகுபாடுபட்ட, புலனாய்வாளர்களை நாம் முட்டாள்களாக்கி உள்ளோம்.

புலன் விசாரணை செய்தவர்கள் அனைவரையுமே, கோமாளியாக்கி நம்பிக்கை இழக்கச் செய்துள்ளோம். இனி, எந்த ஒரு வழக்கிலும், உருப்படியான விசாரணை நடத்த அதிகாரிகள் முன்வருவரா என்பது சந்தேகமே. அதனால், சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகளில், குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றம் உட்பட யாருக்கும் இல்லை என்ற ரீதியில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஒரு பக்கம் வழக்குகள் தேங்குகின்றன என்று கவலைப்படுகிறோம். மறுபக்கம் முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் திரும்ப திரும்ப விசாரிக்கப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால், வழக்குகள் தேங்காமல் என்ன செய்யும்.

தீர்ந்து போன வழக்குகளில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டால், பதிவாளர்கள் நிலையிலேயே அவை நிராகரிக்கப்பட வேண்டும்; விசாரணைக்கே வர விடக்கூடாது. பேரறிவாளன் விடுதலையும், அது குறித்த கொண்டாட்டங்களும், நம் நாட்டு மக்களின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால். நடப்பதெல்லாம் நல்லதாக தெரியவில்லை; நாட்டிற்கு கேடாகி விடுமோ என்ற அச்சம் தான் தலை துாக்குகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...