'முதல்வர் ஸ்டாலின் ஹிந்து மதத்திற்கு எதிரானவர் என்று சொல்லி பிரித்து விடாதீர்கள்' என, இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஆதரவாக, சில காரணங்களையும் அடுக்கியிருந்தார்.
'கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி; நம்புகிறவன் முட்டாள்' என்று சித்தாந்தம் பேசியவரை குல குருவாகக் கொண்டவர்கள், தி.மு.க.,வினர். ஊரெல்லாம் மேடை போட்டு பகுத்தறிவு பேசும் முதல்வர் ஸ்டாலின், தன் வீட்டிலேயே தனக்கு எதிரியா எனக் கூறி, கோவிலுக்கு செல்லும் மனைவியை கண்டித்திருக்க வேண்டும்; ஏன் செய்யவில்லை?
எல்லாம் ஊருக்கு மட்டுமே உபதேசம் கதை தான். இதையே கவியரசு கண்ணதாசன், 'பகுத்தறிவை ஊருக்கு உரைத்து, பணத்தறிவை தனக்கு உரைப்பவன் கவிஞன் என்றால், நான் கவிஞன் இல்லை' என்றார். ஊரான் பெண்டாட்டி தாலியை அறுக்க ஓடோடி வரும் இந்த சீர்திருத்தவாதிகள், முதலில் தங்கள் மனைவியரின் தாலிகளை அறுத்தல்லவா முன் உதாரணமாக திகழ்ந்திருக்க வேண்டும்.
அதைச் செய்யவில்லையே... ஏன்? ஸ்டாலின் உண்மையிலேயே ஹிந்து மதத்திற்கு எதிரானவர் இல்லை எனில், தேவர் குரு பூஜையில் பங்கேற்ற போது வழங்கிய விபூதியை நெற்றி யில் பூசியிருக்க வேண்டும்.ஸ்டாலின் ஹிந்துக்களுக்கு எதிரானவர் என்று சொல்ல, ஒரு காரணம் தான் இருக்கும். எதிரானவர் என்பதை விவரிக்க ஓராயிரம் காரணங்கள் உண்டு.
இதை முதல்வருக்கு ஆதரவாக கடிதம் எழுதியவரும், மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 'சேரிடம் அறிந்து சேர்' என, அவ்வையார் சொன்னதை மக்கள் படித்திருந்தால், தி.மு.க., வினர் தமிழகத்தில் தலைதுாக்கி இருக்க முடியுமா?
No comments:
Post a Comment