*சமையல் செய்யும் பொழுது இதெல்லாம் செஞ்சா வறுமை தாண்டவமாடும் தெரியுமா பணக்கஷ்டம் வராமல் இருக்க இந்த தவறை செய்யாதீர்கள்*
*சமையல் செய்யும் பொழுது எப்பொழுதும் சுத்தபத்தமாக சமைக்க வேண்டும் சமையல் செய்த பின்பும் சமையலறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் சமையல் பாத்திரங்களை இரவு நேரத்தில் அப்படியே போட்டு வைக்கக் கூடாது என்கிறது சாஸ்திரங்கள் இப்படி சமையல் கட்டை சுற்றி நிறையவே ஆன்மீக தத்துவங்கள் உண்டு அந்த வகையில் சமையல் செய்யும் பொழுது நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன இதனால் பண கஷ்டம் வருமா என்பதைத் தான் நாம் இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்*
*பொதுவாக சமையல் செய்யும் பொழுது அன்னபூரணியை வழிபட்டு செய்தால் ருசி கூடும் என்று கூறுவார்கள் அன்னபூரணி அன்னத்தை வழங்குகிறாள் எனவே அன்னபூரணியின் படம் கட்டாயம் சமையலறையில் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் அரிசி ஆழாக்கு எடுத்து அரிசி போடும் பொழுது அதை தொட்டு வணங்க வேண்டும் இதனால் எப்பொழுதும் வறுமை இல்லாமல் இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு*
*வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பொழுது அரிசி ஆழாக்கை வைத்து பூஜை செய்வது மிகுந்த நன்மைகளை கொடுக்கும் தலை தட்டாமல் கோபுரம் போல அரிசியை ஆழாக்கில் எடுத்து ஒரு தட்டில் வைத்து பூஜையில் வையுங்கள் அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள் இப்படி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் செய்து வர குடும்பத்தில் பண கஷ்டம் என்பதே வராது குறிப்பாக தானியங்களுக்கு பஞ்சம் ஏற்படாது*
*சமையல் செய்பவர்கள் சாதம் வடிக்கும் பொழுது சாதத்தை வீணாக்காமல் இருக்க வேண்டும் சரியான மூடி போட்டு சாதத்தை வடிக்க வேண்டும் இல்லை என்றால் சாதம் ஆனது வீணாகும் இதனால் அன்ன தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு மாதா மாதத்திற்கு மளிகை சாமான் வாங்க முடியாமல் போவது வருமானம் குறைவது போன்றவை ஏற்படும் சாதம் வடிக்கும் பொழுது அரிசியை சாப்பிட கூடாது எச்சில் படாமல் அரிசியை உலையில் போட வேண்டும் அப்பொழுது தான் தரித்திரம் உண்டாகாமல் இருக்கும்*
*குழம்பு வைக்கும் பொழுதும் அதே போல குழம்பை கரண்டியால் எடுத்து அப்படியே சுவைத்துப் பார்க்க கூடாது உப்பு அல்லது காரம் சரி பார்க்க வேண்டும் என்றால் சிறிதளவு கையில் ஊற்றி கொண்டு பிறகு ருசி பார்க்க வேண்டும் கரண்டியை அப்படியே வாயில் எடுத்து ஊற்ற கூடாது இது தோஷங்களை ஏற்படுத்தும் ஒரு தரித்திர செயலாகும் சமையல் செய்யும் பொழுது அழுது கொண்டே சமைக்கக் கூடாது சமையல் என்பது ஒரு கலை ஆகும் அதனை இன்முகத்துடன் பயபக்தியுடன் மற்றவர்களுடைய வயிறும், மனமும் நிறைய நீங்கள் மகிழ்ச்சியோடு சமைக்க வேண்டும்*
*அப்பொழுது தான் அந்த சமயத்தில் சரியான ருசியுடன் சரியான பக்குவத்தில் வரும் இல்லை என்றால் ஏதாவது ஒரு குறை கண்டிப்பாக வந்துவிடும் ஒரு குறையும் சொல்ல முடியாத படி சமைக்கும் பல தாய்மார்கள் தங்கள் மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் குடும்பத்தினரின் பசியை போக்க நல்ல மனதோடு பேரன்போடு சமைப்பவர்களாக இருப்பார்கள் அதனால் தான் அவர்கள் சமைக்கும் சமையலில் ஒரு குறையும் கூற முடியாத அளவிற்கு இருக்கிறது இது போல சமையலில் செய்யக்கூடாத விஷயங்களை செய்யாமலும் செய்ய வேண்டிய விஷயத்தை செய்தும் சமைத்து பாருங்கள். வறுமை என்பதே இருக்காது*
No comments:
Post a Comment