* ஸ்டாலின் நினைத்திருந்தால், தன் மனைவியை கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லையே என்று நண்பர் குறிப்பிட்டிருந்தார். அதை, இந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும்... 'நான் ஹிந்து சமயத்திற்கு மட்டும் எதிராக இருப்பேன்; அந்தப் பாவத்தை போக்க, நீ கோவில் கோவிலாக செல்' என, மனைவிக்கு ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கலாம் அல்லவா?
* தேவர் குரு பூஜையில் பங்கேற்ற போது கொடுத்த விபூதி பிரசாதத்தை, ஸ்டாலின் நெற்றியில் பூசாமல், கீழே கொட்டினாரே... அது ஏன்?
* ஸ்ரீரங்கத்தில் நெற்றியில் திலகம் இட்டபோது, உடனே அழித்தவர் தானே ஸ்டாலின்
* கொரோனா தொற்று நேரத்தில், பல கட்டுப்பாடுகளை தளர்த்தியவர், ஆலயங்களில் மட்டும், வெள்ளி, சனி, ஞாயிறு தரிசனம் இல்லை என்று அறிவித்தாரே... அது தான் அவர் ஹிந்து மதத்திற்கு ஆதரவானவர் என்பதற்கான லட்சணமா?
* தற்போது, தில்லை நடராஜரை அருவருப்பாக விமர்சனம் செய்து, 'வீடியோ' வெளியிட்ட நபரை கைது செய்யாமல், வேடிக்கை பார்க்கிறாரே... அது ஏன்? இப்படி ஹிந்து மதத்திற்கு எதிராக, முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருவதை, அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகலாம். அவர் முதலில், ஹிந்து மத எதிர்ப்பை கைவிட்டு, பிற மதங்களைப் போல, ஹிந்து மதத்தையும் நேசிக்க வேண்டும்.
மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போல, தீபாவளி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்வாரேயானால், அவர் ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல என்பதை ஒப்புக் கொள்ளலாம். செய்வாரா முதல்வர் ஸ்டாலின்?
***
No comments:
Post a Comment