பேரறிவாளன் விடுதலை குறித்து காங்., தலைவர்கள் கருத்தை கேலி செய்து, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரின் கணவர், 'பேஸ்புக்'கில் காங்கிரசாரை கடுமையாக சாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன். ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் விடுதலைக்கு, காங்., தலைவர்கள் அழகிரி உட்பட பலரும் கருத்துதெரிவித்துள்ளனர்.
சகுனங்கள் கண்முன்!
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் வீட்டுக்கு வந்த பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாளுக்கு, திருமணச்சீர் போன்ற பொருட்களை வழங்கினர். இது தொடர்பாக, ஜெகதீசன் தனது பேஸ்புக் பதிவில், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற தயாராகும் சகுனங்கள் கண்முன்!' என, கருத்து தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவுகள்:பேரறிவாளன் மற்றும் விடுதலை புலிகள் பற்றி தி.மு.க.,வுக்கு உடன்பாடற்ற மாற்று கருத்துக்களை சொல்லும் அழகிரி போன்றோரின் மாற்று கருத்துக்களுக்கு பதிலிடுவதை தவிருங்கள்.ஒட்டாத அந்நியம்அது அவர்களது 'சர்வைவலு'க்கான பதிவுகள். ஒரு கை ஓசை அது. கீழ்பவானி பிரச்னை, காளிங்கராயன் பிரச்னையில் தெளிவற்ற நோக்கு அவர்களுடையது. அன்று இளங்கோ; இன்று அழகிரி; கார்த்திக் சிதம்பரம்; நாளை எவரோ?
எல்லாம் தனக்குத்தான் தெரியும் என நுனிப்புல் மேய்ந்து, சுயபுராணம் பாடிக்கொண்டே காலம் தள்ளட்டும் என விட்டு விடுங்கள்.கிச்சத்தில் ஒட்டாத சட்டை; புட்டத்தில் ஒட்டாத வேஷ்டி; மக்களிடம் ஒட்டாத அந்நியம். மக்கள் உணர்வுக்கு நியாயத்துக்கு குரல் கொடுக்கும் வலிவின்மை. பதவியில் இருப்போருக்கு பல்லக்கு துாக்கும் ஆண்மை, அவர்களின் தனிச்சொத்து. இவை உட்பட பல கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது தளத்திலும், பகிரப்பட்ட தளங்களிலும், காங்கிரஸ் கட்சியினர், சுப்புலட்சுமி ஜெகதீசன் குறித்து பல சர்ச்சையான கருத்துக்களையும், கூட்டணி உடைவது பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.
'சொல்ல எதுவும் இல்லை!'
''தி.மு.க.,வுடனான கூட்டணியை காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்தது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளை ஒட்டி, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான, சென்னை சத்தியமூர்த்தி பவனில், ராஜிவ் உருவப் படத்திற்கு, அழகிரி, திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அழகிரி தலைமையில், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பின், அழகிரி அளித்த பேட்டி:ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்ககப்பட்ட பேரறிவாளன் விடுதலை, எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டியணைத்தது பற்றி, நாங்கள் சொல்ல எதுவும் இல்லை. பேரறிவாளனை கட்டியணைத்தாலும், முத்தம் கொடுத்தாலும் எங்களுக்கு எதுவும் இல்லை.தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இது தெரிந்து தான் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இது தெரிந்து தான், ராகுலை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் அறிவித்தார்.
கூட்டணி முடிவுகளை காங்கிரஸ்மேலிடம் தான் எடுக்கிறது. தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதையும், மேலிடம் தான் முடிவு செய்தது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment