ஆசியா மற்றும் ஆபிரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் ..
சீன அரசு அதன் பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தின் வாயிலாக அதிகளவிலான கடன்களைக் கொடுத்துச் செயல்படுத்தியது.
இந்நிலையில் சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகளுக்கு இலங்கை ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.
சீனா வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு பெயரில் இலங்கை தலையில் பல பில்லியன் டாலர் கடனை கட்டியது.
இதைத் தொடர்ந்து முறைகேடான நிர்வாக முறை, கொரோனா தொற்று, நிதி பற்றாக்குறை,
30 சதவீத பணவீக்கம், நிலையற்ற அரசு எனப் பல மோசமான பிரச்சனைகளில் இலங்கை தற்போது திவாலாகி உள்ளது.
சீனாவின் கடன் வலை இலங்கையின் இந்த மோசமான நிலை சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள
12க்கும் அதிகமான ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தனது பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தின் வாயிலாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதாகக் கூறினாலும் ..
ஏழ்மையில் இருக்கும் பல நாடுகளைக் கடன் வாயிலாகத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
மக்கள் தற்போது போதுமான உணவு பொருட்கள் இல்லாமல், மின்சாரம் இல்லாமல், எரிபொருள் இல்லாமல்,
வெளிநாடுகளுக்குச் செல்ல போதுமான பணம் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இலங்கை தலையில் சுமார் 51 பில்லியன் டாலர் கடன் உள்ளது.
இதில் பெரும் பகுதி சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பெயரில் உள்ளது.
இலங்கை அரசு சீனாவிடம் கடன் வாங்கிக் கட்டமைத்த திட்டங்கள் மூலம் மிகவும் குறைவான லாபம் மட்டுமே அரசுக்குக் கிடைத்துள்ளது.
மேலும் இத்திட்டங்களைத் தொடர்ந்து நிர்வாகம் செய்வதற்கும் அதிகப்படியான செலவுகள் ஆகும் காரணத்தால் இலங்கைக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இலங்கையின் மொத்த கடனில் 10 சதவீதம் சீனா உடையது.
சீனா இலங்கைக்கு மேலும் கடன் வழங்க முன்வந்தது,
ஆனால் இலங்கையின் கடனைக் குறைக்கக்கூடிய ஒரு செயல்முறையை முன்வைத்தது.
சீனா இலங்கையின் கடனை குறைத்தால் பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தில் இருக்கும் பிற நாடுகளும் சலுகையைக் கேட்டும் என்ற காரணத்தால் சீனா பின்வாங்கியது.
இதனால் தற்போது சீனாவை கடன் வலையில் சிக்கியது தான் மிச்சம்,
தற்போது இலங்கைக்கு எரிபொருள் முதல் உணவு பொருட்கள் வரையில் இந்தியா அனுப்பி வருகிறது.
புதிய கடனுக்காக IMF அமைப்பிடம் தற்போது இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பெல்ட் மற்றும் ரோடு திட்டம் சீன அதிகாரிகள் பெல்ட் மற்றும் ரோடு திட்டங்கள் வணிக முயற்சிகளை மேற்கொள்ளும் திட்டம், நிதியுதவி அளிக்கும் திட்டம் அல்ல என்று கூறுகிறார்கள்.
பெரும்பாலான கடன்கள் வணிக அடிப்படையில் தான் உள்ளன.
சீனா இத்தகைய கடன்களைச் சிறிய நாடுகளைத் தேடிப் தேடி பிடித்து வழங்குகிறது,
ஒருபக்கம் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி செய்தாலும் மறுபுறம் அத்திட்டத்தைச் சீன நிறுவனங்களே ஒப்பந்தம் முறையில் செய்கிறது.
இதற்கான செலவுகளைத் தத்தம் நாடுகள் கொடுக்க வேண்டும்..
இலங்கையில் சீனாவின் திட்டங்கள் நினைத்தபடி லாபத்தை அளிக்கவில்லை.
இதனால் சீனா கடந்த சில வருடங்களாக எந்த முதலீட்டையும் செய்யவில்லை,
ஆனால் கடன் சுமை மட்டும் இலங்கை தலையில்.
ஆப்பிரிக்காவில் பல நாடுகள் இத்தகைய பிரச்சனையில் சிக்கியது மட்டும் அல்லாமல்
சீனாவின் கடனை அடைக்க அதிகப்படியான வரியை மக்கள் மீது விதிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இதற்கு உதாரணம் கென்யா...
இதேவேளையில் சீனா கடன் கொடுத்த நாடுகளின் வர்த்தகத் தேவைகளை அனைத்தையும் தெரிந்து கொண்டு
தனது தயாரிப்புகளை அதிகளவில் இறக்குமதி செய்து வர்த்தகச் சந்தையையும் கைப்பற்றி விடும்.
இதை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டுக் கடன்களில்
'நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் காடுகளில் மாநாட்டு அரங்குகளைக் கட்டியுள்ளது இலங்கை அரசு.
இதன் மூலம் எந்த வருமானத்தையும் அரசு பெறவில்லை' என்று இலங்கை பொருளாதார வல்லுனர் கபீர் ஹாஷிம் கூறினார். '
இப்போது டாலர் கடன்களைத் திருப்பிச் செலுத்த இலங்கையிடம் டாலர்கள் இல்லை.' என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் பொறுப்பற்ற தன்மைக்குத் தென்கிழக்கு பகுதி ஹம்பாந்தோட்டா-வில் (Hambantota) சீனா கட்டிய துறைமுகம் முக்கியமானது.
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரில் இத்திட்டம் அமைக்க நிபுணர் குழுவினால் திட்டம் நிராகரிக்கப்பட்ட போதிலும்
1.1 பில்லியன் டாலர் சீனக் கடனில் கட்டி முடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment