Thursday, May 19, 2022

அர்ப்பமான வெற்றி இது!

 ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன், விடுதலையை, அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும், கொண்டாடி வருவது வெட்கக்கேடான விஷயம்.



பேரறிவாளன் தமிழன் என்றால்... ராஜிவ் படுகொலையின் போது, அவருடன் இறந்த மற்ற அப்பாவிகள் வெளிநாட்டினரா? அற்புதம்மாளின் பாசப் போராட்டத்திற்கு வெற்றி என்றால், ராஜிவுடன் உயிரிழந்தவர்களின் தாயார்கள் எல்லாம் பாசம் அற்றவர்களா... அவர்களின் வலிகள் எல்லாம், இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லையா? அரசியல் சட்டத்தின், 142வது விதியின் படியே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை நிரபராதி என்றோ, கொலை குற்றவாளி இல்லை என்றோ நீதிபதிகள் சொல்லவில்லை. இனி... அரசியல் தலைவர்களின் கொலைகள் எல்லாம் நியாயப்படுத்தப்படும்... பேசு பொருளாகவும் மாறும்.



சிவாஜி நடித்த கவுரவம் திரைப்படத்தில், நகைச்சுவைக்காக ஒரு வசனம் வரும். அதில், பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு போன் செய்து விட்டால் போதும்... பட்டப்பகலில் அண்ணா சாலையில் ஒரு கொலை செய்து விட்டு, ஹாயாக தியேட்டரில் சினிமா பார்க்கலாம் என்று... அதைத்தான் பேரறிவாளன் விடுதலை நினைவூட்டுகிறது. இது, தமிழனுக்கு ஏற்பட்ட தலைகுனிவு... சுயநல அரசியல்வாதிகளுக்கு கிடைத்த அர்ப்பமான வெற்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...