*பிரதமர்* அலுவலகத்துக்கு
*ஒரு மூத்த குடிமகன்* அனுப்பிய
*திறந்த மடல்* ஒன்றிலிருந்து
இன்றியமையாச் சில பகுதிகள்:
• நான் பணியிலிருந்து ஓய்வுபெற்ற போது
*20 லட்ச ரூபாயைத்* *தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்*
01-08-2012 இல் ஐந்தாண்டுகளுக்கு
டெபாசிட் செய்தேன்.
*வட்டியாக மாதந்தோறும்*
*ரூ.17,676/- கிடைத்தது*
வாழ்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு
அது போதுமானதாக இருந்தது.
• டெபாசிட்டின் முதிர்வுத்தேதியில் என்னுடைய 20 லட்சம் மீண்டும் டெபாசிட் (reinvested) செய்யப்பட்டது.
• இப்போது எனக்கு *மாதந்தோறும்*
*ரூ.10,416/- மட்டுமே* வட்டியாகக் கிடைக்கிறது; அதாவது முன்பு கிடைத்ததைவிட
*ரூ.7260/- குறைந்து விட்டது;* குறைந்துவிட்டது என்று சொல்வதைவிடப் பறிக்கப்பட்டு
விட்டது என்றே சொல்ல வேண்டும்.
• வைப்புநிதி வட்டி *வருவாயில் 41% குறைந்துவிட்ட* அதேவேளையில் இனறியமையாப் *பொருள்களின் விலையோ 200% உயர்ந்துவிட்டது.*
• இந்தச் சூழலில் நான் என்னுடைய மருந்து, சிகிச்சை, காய்கறி, பழம்,
பால், மளிகை செலவினங்களுள்
எதைக் குறைத்துக்கொள்ள முடியும்?
• தாங்கள் 2014இல் ஆட்சிப்
பொறுப்பை ஏற்ற பிறகு மூத்த குடிமக்களுக்காக எந்தவொரு சலுகையையும் செய்யவில்லை என்பதுடன் இருந்ததையும் பிடுங்கிக்கொண்டு விட்டீர்கள் என்பதுதான் உண்மை.
• தொழில்துறைக்கு - காரப்பரேட்டுக்குக் குறைந்த
வட்டியில் கடன், வாராக்கடன் தள்ளுபடி... எனப் பல சலுகைகளை ஓசைபடாமல் வழங்குகிறீர்கள். வழங்குங்கள். ஆனால், அவற்றை
மூத்த குடிமக்களின் ரத்தத்தை உறிஞ்சிதான் வழங்க வேண்டுமா?
• இந்த நாட்டிற்காக,
அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் 30 - 40 ஆண்டு
காலம் தங்களின் பொன்னான இளைமையை வருத்திக்கொண்டு உழைத்த மூத்த குடிமக்கள்
தங்களின் ஓய்வு வாழ்க்கையை நிம்மதியாகவும் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டியது பொறுப்புள்ள
ஓர் அரசின் கடமை என்பதைத்
தாங்கள் உணரவில்லையா?
• அதோடுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் அரசுக்கு முறையாக வருமானவரி கட்டியுள்ள மூத்த
குடிமக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு (social security) வழங்கவேண்டியது
ஓர் அரசின் பொறுப்பில்லையா?
• வைப்புநிதி வட்டியில் மூத்த குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள 41% இழப்புக்கு நிகராக அமைச்சர்களும், எம்எல்ஏ - எம்பிக்களும் தங்கள் சம்பளத்தில் - படியில் - சலுகைகளில் ஏன் குறைத்துக் கொள்ளக்கூடாது? இவர்களுக்குச் சம்பளம் - படிகள் - சலுகைகள் - உயர்வு அவ்வப்போது எந்தவொரு விவாதமுமின்றி
ஒரே நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டு விடுகின்றன.
• மூத்த குடிமக்களுக்கான
வைப்புநிதி வட்டிவிகிதமாக
முதலில் 9.2% வழங்கப்பட்டது. பின்
அது 8.3% ஆகக் குறைந்தது; மேலும்
அது 7.4% ஆகச் சரிந்தது; இப்போது
அது 6.9 ஆகப் படுத்தே விட்டது.
• பணி ஓய்வின்போது கிடைக்கும் பணப்பயன் முழுமைக்கும் -
நாட்டுக்காக உழைத்த மூத்த குடிமக்களின் வைப்புநிதிக்குக் குறைந்தது 12% வட்டி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். தங்களின் எஞ்சிய வாழ்க்கையை இந்த வட்டி வருவாயிலிருந்தே - கைக்கும் வாய்க்குமாகத் தள்ள வேண்டிய நிலையிலுள்ள மூத்த குடிமக்களின் உணர்வுகளையும் துயரங்களையும் தாங்கள் புரிந்து கொள்வீர்கள்
என்று நம்புகிறேன்.
• இந்தக் கடிதம் தங்களின்
மனத்தைப் புண்படுத்தியிருந்தால் அருள்கூர்ந்து பொறுத்தருளவும்.
No comments:
Post a Comment