Saturday, May 21, 2022

தமிழக கட்சிகளின் நியதி இதுதான்.

 முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பல்வேறு மேல் முறையீடு காரணமாக, அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


அதை, அனுபவிக்க வேண்டியது குற்றவாளியின் கடமை.ஆயுள் தண்டனை என்றாலே, ஆயுள் முடியும் வரை என்று தானே பொருள். பேரறிவாளன், 30 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார் என்பதற்காக விடுவிக்கப்பட்டு உள்ளார். ஆனாலும், அவர் குற்றவாளி அல்ல என்று, உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.

முடிவெடுக்க வேண்டிய நேரத்தில், அரசு முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதால், விடுதலை என்று நீதிமன்றம் சொல்லிஇருக்கிறது. அதேநேரத்தில், நீதிமன்றங்களில் பல வழக்குகள் ஆண்டு கணக்கில் தேங்கிக் கிடக்கின்றனவே. அதில், ஏற்படும் காலதாமதம் யாரையும் பாதிக்காதா? இதற்கு நீதிபதிகளின் பதில் என்ன?

பேரறிவாளவன் விடுதலையை, தமிழகத்தில் பல கட்சிகள் கொண்டாடி வருகின்றன. இதில், வேடிக்கை என்னவென்றால், 'அறம் வென்றது, தர்மம் ஜெயித்தது, நீதி வென்றது' என்றெல்லாம் சொல்கின்றனர். ஹிஜாப் விவகாரத்தில், கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை விதித்த போது, இதே அரசியல் கட்சிகள், 'நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்க வேண்டியதில்லை' என்று விமர்சித்தன.

இந்த கட்சிகள், எதிர்பார்க்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தந்து விட்டால் பாராட்டுவர். மாறுபட்ட தீர்ப்பை தந்தால், உச்ச நீதிமன்றமா அல்லது உச்சி குடுமி மன்றமா என்று கேவலமாக விமர்சிப்பர். சட்டசபை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் கவர்னர் என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

அப்படி ஒரு சூழ்நிலை வரும் என்றால், கவர்னர் பதவியே தேவையற்ற ஒன்றாகி விடாதா? உச்சநீதிமன்றம் தந்த அனைத்து உத்தரவுகளையும் தமிழக அரசு நிறைவேற்றி விட்டதா?உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருந்ததற்கு, அவற்றை புறந்தள்ளி செயல்பட்டதற்கு, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை கொடுத்ததா என்ன?

காந்தியை கொன்ற கோட்சே ஒரு தீவிரவாதி. ராஜிவ் படுகொலை வழக்கின் குற்றவாளி போராளி. ஏனெனில், பேரறிவாளன் தமிழர். தமிழன் என்றால் கொலை குற்றம் செய்தால், 10 ஆண்டுகளில் வெளியே வர வேண்டும்; இது தான் தமிழக அரசியல் கட்சிகளின் நியதி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...