கார்த்திகை மாதம் முழுவதுமே இறை வழிபாட்டிற்கான மாதம் தான். இந்த மாதத்தில் நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் அத்தனை விசேஷமானது. நாம் தினமும் ஏற்றும் ஒரு தீபம் கூட இறையருளை பெற்று கொடுக்கக்கூடிய சக்தி இந்த மாதத்திற்கு உண்டு. இப்படியான இந்த மாதத்தில் கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் ஏற்றப்படும் பரணி தீபம் மிகவும் விசேஷமானது. அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் ஏற்றும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த வருட பரணி தீபம் மிக மிக விசேஷமானது. இந்த பரணி தீபத்தை ஏற்றுவது சிவபெருமான் அருளை பெற தான், கார்த்திகை மாதம் சோம வார திங்கட்கிழமை விரதம் மிகவும் விசேஷம், அதிலும் சிவபெருமானுக்கு அதி முக்கியமான நாளான பிரதோஷமும் இந்த நாளில் வருகிறது. அதை விட மிக விசேஷம் இந்த நாளில் ஏற்றப்படும் இந்த தீபம் உங்களின் தலைமுறை முழுவதும் நலமாக வாழ வழி செய்யும். பரணி தீபம் கார்த்திகை திருநாளுக்கு முதல் நாள் ஏற்ற வேண்டும். அதாவது திங்கட்கிழமை (5.12.22) அன்று மாலை 6 மணி அளவில் உங்கள் வீட்டு பூஜை அறையில், தாம்பாள தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்த பிறகு, அந்த தட்டில் கோலம் போட்டு கொள்ளுங்கள். அடுத்து ஐந்து புது அகல் விளக்கை எடுத்து கொள்ளுங்கள், அதையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைத்து அந்த அகல் விளக்கை தாம்பாளத் தட்டில் வைத்து விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு கொள்ளுங்கள். இந்த விளக்கின் முகம் ஒன்றை ஒன்று பார்க்கும் படி வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் எப்போதும் ஏற்றும் குத்து விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, வாசலில் ஏற்றும் விளக்கு அனைத்தையும் ஏற்றிக் கொள்ளலாம். இவை இல்லாமல் இந்த ஐந்து விளக்கையும் தனியாக ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றிய பிறகு இந்த ஒரு வேண்டுதலை மறக்காமல் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இறந்த பெரியவர்கள் எமலோகத்தின் இருளில் இருந்தால் அவர்கள் அந்த இருளில் இருந்து விலகி அவர்களுக்கென்று ஒளிமிக்க ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் செய்த பாவங்களை நீக்கி அவர்களும் மேலோகத்தில் நிம்மதியான ஆத்மாவாக வாழ அருள் புரிய வேண்டும் என்றும் வேண்டி கொள்ளுங்கள். அது மட்டும் இன்றி நீங்கள் வாழும் காலத்திற்குப் பிறகு ஈசனின் திருவடியை அடைந்து அந்த மேலுலக வாழ்க்கையின் இருளே இல்லாத வரம் வேண்டும் என்றும், இந்த தீபத்தின் முன் அமர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள். இதனால் இந்த பூலோகத்தில் நீங்கள் தெரியாமல் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி வாழும் வாய்ப்பை பெறலாம். உங்கள் வீட்டுப் இறந்த பெரியவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து அவர்கள் மேலுலக இருளில் இருந்து அகல இதை விட நீங்கள் பெரியதாக அவர்களுக்கு வேறு எதையும் செய்து விட முடியாது. அத்தகைய சக்தி வாய்ந்த இந்த பஞ்சபூதங்களின் சக்திகளை தரும் பரணி தீபத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment