*பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரிசிக்க வேண்டும். ஒன்று கொடிமரத்தில் அமைந்திருக்கும் குதிரை. மற்றொன்று பதினெட்டாம்படி* *மேலேயுள்ள மணி ரூபத்தில் உள்ள ஐயப்பன்.*
*கொடிமரத்தின் மேலுள்ள குதிரையின். புராண வரலாறு:*
பகவான் ஐயப்பனுக்கு
*ஓம் ஸ்ரீ அஸ்வரூடனே நம:* என்ற ஸ்லோகம் உள்ளது.
குதிரை வந்த வரலாறை அனுபவிப்போம்.
பகவான் ஐயனுக்கு ஆலயம் கட்ட, பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் முயற்சித்த சமயம், *அதை அறிந்த தேவேந்திரன் அந்த அம்பலம் எழுப்ப பல தடைகளை செய்தான்.* காரணமென்னவென்றால், தன்னுடைய இந்திரப் பதவி, எங்கே பறிபோய் விடும் என்ற அச்சத்தால், இடையூறுகளை ஏற்படுத்தினான். *இதை அறிந்த சிவபெருமான், இந்திரளை அழைத்து எச்சரிக்கை செய்தார். இல்லை என்றால் மகிஷியை வதைத்த மணிகண்டனால், வதைக்கப் படுவாய் என்றுரைத்தார்.* இதைச்செவியுற்ற *இந்திரன், தன் தவறை திருத்திக் கொண்டு, தேவதச்சன் "விஸ்வகர்மா"வை அழைத்து ஐயனின் ஆலயத்தை நிர்மாணிக்க ஆணையிட்டான். மேலும் இந்திரலோகத்திலுள்ள "உச்சரைவஸ்" என்ற குதிரையை ஐயனுக்கு வாகனமாக அளித்தான்.* *அதன் காரணமாகவே கொடிமரத்தின் மேலே குதிரை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.*
மற்றொன்று *18-ம் படிக்கு இடப்புறம் உள்ள கோயில் மணி. ஆதியில் சபரிமலையில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை (பஞ்சலோக விக்கிரகம்), காலப் போக்கில் இயற்கைச் சீற்றத்தால் சற்று சேதமானது.* 1950-ம் ஆண்டு அந்தச் சிலை மேலும் சேதமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் *அந்தச் சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர். 18-ம் படி இருக்கும் இடத்தில், வலம் - இடம் என இருபுறமும் அங்கு மணிகள் இருக்கும். அதில், இடப் பக்கமாக உள்ள மணிதான். ஆதிகாலத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் திருஉருவச் சிலை."*
*கோயிலில் கொடிமரம் இருப்பது “ஆலயம் புருஷாகாரம்’ என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது.* கோவிலுக்குள் நுழைந்ததும் நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும்.
த்வஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரமும் மிகப்பெரிய தத்துவங்களை தன்னுள் கொண்டுள்ளது.
*நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று நம் ஆகமங்கள் சொல்கின்றன.*
*நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன.*
*அது போலவே 32 வளையங்களுடன் கோவில்* *கொடி மரம் அமைக்கப்படுகிறது.*
*நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி,* *ஆக்ஞா எனப்படும் ஆறு ஆதாரங்களும்,* இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன.
பொதுவாக இடை,பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க, மனம் ஒரு நிலைப்படும். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது
*கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது.* அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.
இது கோவிலுக்கு கோவில் மாறுபட்டாலும், கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள்.
அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும் இதற்கு சமபீடத்தில், *சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு* *மேல் உள்ள எண்கோணப் பகுதியான விஷ்ணு பாகம் காத்தல்* *தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும்* *சிவபெருமானையும் குறிக்கும்.* கொடிமரத்தின் முன் மும்முறை விழுந்து வணங்க வேண்டும் . அதற்குக் குறையக் கூடாது . கிழக்கு நோக்கிய சந்நிதி எனில் வடக்கில் தலைவைத்துத் தெற்கில் கால் நீட்டி வணங்க வேண்டும் . வடக்கில் சந்நிதி எனில் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்
சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்து கொடி மரங்கள் தயாரிக்கப்படுகிறது.
திருவிழாவில் முதல் நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் பக்தர்களை உயர் பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் எழுந்தருளி அருள் பாலிக்கப்போகிறார் என்பதே.
த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடி மரத்தில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது த்வஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது த்வஜா அவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தக் கொடிமரத்தடியில்தான் கீழே விழுந்து வணங்க வேண்டும் .
*ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் , பெண்கள்* *பஞ்சாங்க நமஸ்காரமும்* *செய்யலாம் .*
*அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை,* *சரீரம்,கைகள் , காதுகள் , முழங்கால்கள் ஆகிய எட்டும்* *தரையில்படுமாறு விழுந்து வணங்குதல் ,*
*பஞ்சாங்க நமஸ்காரம் என்பது கைகள் , முழங்கால்கள் , தலை ஆகிய* *ஐந்தும் தரையில் படுமாறு* *விழுந்து வணங்குதல் .* கொடிமரத்தின் முன் இதன்மூலம் கொடி மரம், மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.
இறைவனுக்கு ஏற்றப்பட வேண்டிய கொடியின் சின்னம் குறித்து சூரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கொடிமரத்தின் முன் மும்முறை விழுந்து வணங்க வேண்டும் . அதற்குக் குறையக் கூடாது . கிழக்கு நோக்கிய சந்நிதி எனில் வடக்கில் தலைவைத்துத் தெற்கில் கால் நீட்டி வணங்க வேண்டும் . வடக்கில் சந்நிதி எனில் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
No comments:
Post a Comment