*அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !*
*டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்க கத்திப்பேசுதல், சோகஇசைகள் மற்றும் சாவுமேளதாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மிகடாக்ஷத்தை சீர்குலைத்து கெடுத்துவிடும்.*
*இதனால் பலநோய்கள் வரலாம். வீட்டில் பணம் தங்காமல் போகலாம், வீண்செலவுகள் ஏற்படலாம் தொழில் நஷ்டம் ஏற்படலாம், என்று இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் ஆன்மீக ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..*
*அதை சமயம் ஆன்மீகநம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுமுடிவுகள் மிகவும் அபாயகரமானதாக உள்ளது.*
*ஆம்...!!!*
*உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும் அதிர்ச்சி ரிப்போர்ட்...*
*இதனால் கண்பார்வை கோளாறில் ஆரம்பித்து மனஇறுக்கம், மனஅழுத்தம், மனநோய் வந்து... உடல்எடை அதிகரித்து.....*
*இதன் தொடர்ச்சியாக...*
*சர்க்கரை வியாதி, மாரடைப்பு, இருதயக்கோளாறு, ரத்தஅழுத்தம், கழுத்து எலும்பு தேய்மானம், தலைசுற்றல், தலைவலி, மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...*
*இதற்கு எல்லாம் முக்கியமான காரணம்....*
*பிறரை எப்படிக்கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கள்ளக்காதல் தொடர்பு எப்படி என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது....*
*குடும்பத்தினருக்குள் மாமியார்-மருமகள் சண்டை, அண்ணன் தம்பி சண்டை சந்தேகப்படுவது, சகுனிவேலை பார்ப்பது, எல்லாம் கற்றுக்கொள்ளலாம்.*
*எப்படி லஞ்சம் பெறுவது!!! கற்றுக்கொள்ளலாம்*
*அதோடு...!!*
*நேர்மையான அரசுஅதிகாரிகளை எப்படி லஞ்சம் வாங்கியது போல் திட்டமிட்டு மாட்டி விடுவது என்றும் கற்றுக்கொடுக்க படுகிறது*
*பிறர் தொழிலை எப்படி கெடுப்பது? எப்படி நம்பிக்கை துரோகம் செய்வது என்பது எல்லாம் காண்பிக்கப்பட்டு மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.*
*இவையெல்லாம் விட பெரியபேரிழப்பு*
*உங்கள் அருமை குழந்தைகளின் விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...*
*இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட சுயலாபத்துக்காக இப்படி பட்ட மக்களைச்சீரழிக்கும் டிவி சீரியல்கள் தயாரித்திட முக்கியத்துவம் தருகிறது..*
*தயவுசெய்து மக்களே*,
*இது போன்ற கேவலமான நாடகங்களை புறக்கணியுங்கள்.. நாம் புறக்கணித்தால் தானே TRP ரேட்டிங் குறைந்தால் தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள்*
*நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மா தான்*
*எனவே உங்கள் விலைமத்ப்பில்லா ஓய்வுநேரத்தை அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்*
*குறைந்த நேரம் நல்லதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள் மற்ற நேரங்களில் நல்ல புத்தகங்களை படியுங்கள்.. . கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்லகாரியங்களிலும் ஈடுபடுங்கள்*
*இல்லையேல் வரும் பலன்களை நல்லதோ கெட்டதோ நீங்கள் தான் அவற்றை TV பார்த்து உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து அனுபவிக்க தயாராகுங்கள்.....*
*அல்லதை விடுத்து நண்பர்களே...!!*
*நல்லதை பாருங்கள்;* *கேளுங்கள்*
*பேசுங்கள்*
*சிந்தியுங்கள்*
*வாழ்வில் எல்லாம் நல்லதாய் நடக்கும் ........*
*வாழ்க வளமுடன் & நலமுடன்*
*தீதும் நன்றும் பிறர் தர வாரா* நம்மைச்சுற்றி நடப்பனவற்றுக்கு *நாமே பொறுப்பு........*
No comments:
Post a Comment