Sunday, December 11, 2022

பணம் பத்தும் செய்யும். R.S. பாரதி சொன்னது நிரூபணம் ஆகிறது.

 ஊடகங்கள் பரபரப்புக்காக கீழ்த்தரமாக தலைப்பிட்டு செய்தியை வழங்கும் வேசித்தனத்தை தினமணி மட்டும் தான் பத்திரிகை உலகில் செய்யாமல் இருந்தது. விடுதலை, தீக்கதிர், நக்கீரன், ஆனந்த விகடன் வரிசையில் அவர்களோடு தினமணியும் இணைந்துவிட்டது வருத்தமான விஷயம். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்த செய்தி என்றால் இப்போது பரபரப்புக்கு பஞ்சமில்லை என்பதால் - அந்த பரபரப்பிற்காக மகா கேவலமான தலைப்புடன் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்த செய்தியொன்றை தினமணி.காம், "அறிவு இருக்கிறதா?', 'செத்தா உங்களுக்கு என்ன?': பதிலளித்துள்ள அண்ணாமலை" என்கிற தலைப்பில் 09-12-22 நாளன்று வெளியிட்டிருந்தது.

இந்த தலைப்பை வாசித்ததும் - வாசித்தவர் மனதில் என்ன தோன்றும். அண்ணாமலை தான், யாரையோ "அறிவு இருக்கிறதா?', 'செத்தா உங்களுக்கு என்ன?' என்று கேட்டிருக்கிறார் என்பதாக தானே நினைக்க வழியமைக்கும். அதற்காக தானே, அப்படி நினைக்க வேண்டும் என்பதற்காக தானே, அப்போது தான் செய்தியை வாசிப்பார்கள் என்கிற கீழ்த்தரமான புத்தியில் தானே அங்ஙனம் தலைப்பும் வைத்தது. முதலில், "அறிவு இருக்கிறதா?', 'செத்தா உங்களுக்கு என்ன?' என்றெல்லாம் தலைப்பு வைக்கலாமா? தினமணி தந்த செய்தியை வாசித்துவிட்டு - சமீபகாலத்தில் தினமணியிடம் ஏற்பட்டுள்ள கேவலமான மாற்றத்தை பார்ப்போம். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்த செய்தி.
"நுங்கம்பாக்கத்தில் முக்கிய சாலையின் தடுப்பில் கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து காட்டமாக பதிவிட்ட ஜெயராம் வெங்கடேசனுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் முக்கிய சாலைத் தடுப்பில் கொடிகள் நடப்பட்டிருப்பது குறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, பள்ளிக்கரணை அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் விழுந்து இளம்பெண் பலியான நிலையில், இவ்வாறு புயல் காற்று வீசக்கூடிய நாளில், கட்சிக் கொடியை வைத்திருப்பது தொடர்பாக அவர் தனது கேள்வியை எழுப்பும் விதமாக இந்த டிவிட்டர் பதிவை வைத்துள்ளார்.
அதாவது, புயல் வரும் நாள் அன்று இப்படி பாஜக கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை அவர்களே?? கொடி காற்றில் விழுந்து 4 பேர் செத்தா உங்களுக்கு என்ன ? தமிழக காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருவர் டிவிட்டரில் படத்துடன் மிகக் கட்டமாக பதிவிட்டிருந்தார். இதற்கு, பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை, அண்ணா!. உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தி யுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி! என்று மிகப் பொறுமையாக பதிலளித்துள்ளார்." என்பதாக உள்ளது செய்தி.
இவ்வாறான செய்திக்கு தலைப்பை விஷமத்தனமாக அல்லவா தினமணி வைத்துள்ளது. "அண்ணாமலைக்கு அறிவு இருக்கிறதா" என கேட்ட நபருக்கு பொறுமையாக பதிலளித்த பா.ஜ.க. தலைவர்" என்று தானே தலைப்பிட்டிருக்க வேண்டும். அவ்வாறாக தலைப்பிட்டால் - அந்த செய்தியை யாரும் வாசிக்க வாய்ப்பில்லையோ என்கிற அடிப்படையில் விஷமத்தனமான தலைப்புடன் செய்தி. இது அறிவு நாணயமற்றவன் செய்யக்கூடிய வேலை. இதுவரை அறிவொழுக்கத்துடன், செய்தி ஒழுக்கத்துடன் இருந்த தினமணி - சமீபகாலமாய் தடம் மாறுகிறது. ஆல்பம் என்கிற பெயரில் நடிகைகளின் அரை நிர்வாண கவர்ச்சி படங்களை, வசிகரமான தலைப்பில் வெளியிட்டு வருகிறது. அச்சு ஊடகத்திலிருந்தவரை - இல்லாத விஷமத்தனம், காட்சி ஊடகத்திற்கு வந்தபிறகு வந்துவிட்டது.
காலங்காலமாய் தினமணியை வாசித்தவன் - இன்றைய தினமணியின் சீர்கேட்டை பார்த்து காறித்துப்ப மாட்டான். நடிகையின் கதை போட்டு அச்சு ஊடகத்தில் காசு பார்த்த நக்கீரன் கோபால் - இன்று காட்சி ஊடகத்திலும் அதே வேலையை தான் செய்கிறார். அது அவர் பிறவிக்குணம். அதனால் அப்படி தான் இருப்பார். அவரை விமர்சிப்பதால் எந்த பயனுமில்லை. ஆனால் தினமணிக்கு என்ன வந்தது. மாற்றம் என்பது ஆரோக்கியமான மாற்றமாக இருக்க வேண்டாமா? இந்த செய்தியை போன்றே பரபரப்புக்காக இதே தினமணி - சில வருடங்களுக்கு முன் போட்ட ஒரு செய்தியை வாசிப்போம். ஏற்கனவே எழுதிய பதிவு தான். அதை இங்கே தருகிறோம்.
"தனது ஹிந்து நண்பர்களுடன் கன்வார் யாத்திரையில் கலந்துகொண்டு ஹரித்துவாரில் இருந்து கங்கை புனித நீரை எடுத்து வந்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பாக்பாத் கிராமத்தைச் சேர்ந்த இர்ஷத், கன்வர் யாத்திரையை முடித்துக்கொண்டு தனது கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று கங்கை புனித நீரைக் கொண்டு பூஜை செய்ய சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள காவல் நிலையத்தில் இர்ஷத் புகார் அளித்தார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஹரித்துவார் புனித யாத்திரை முடித்துக்கொண்டு கங்கை புனித நீரை எடுத்து வந்தது முஸ்லிம் மதத்துக்கு எதிரானது எனக் கூறி பரௌட் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களால் நானும் எனது குடும்பத்தினரும் தாக்கப்பட்டோம். இதில் எனது தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது' என்றார். இந்த செய்திக்கு தலைப்பு எப்படி தர வேண்டும். இர்ஷத் எனும் இஸ்லாமியர், இந்து கோவிலுக்கு சென்றதால், சக இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதை மறைக்கும் விதமாக தினமணி மொட்டையாக தந்த தலைப்பு இது. "கங்கை புனித நீர் கொண்டு வந்த முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்". யாரால் தாக்கப்பட்டார் என்பதை தலைப்பிலேயே சுட்டிக்காட்டி இருக்க வேண்டும் தினமணி. அங்கங்கே இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடப்பதாக கூறும் வேளையில், தெளிவாக தலைப்பிட்டு இருக்க வேண்டும்.
"கங்கை புனித நீர் கொண்டு வந்த முஸ்லிம் இளைஞர் மீது சக இஸ்லாமியர்கள் தாக்குதல்" என செய்தியின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப தலைப்பிட்டு இருந்தால், அதில் எந்தவொரு பரபரப்புக்கும் இடம் இருக்காது என கருதி தினமணி, தாக்கியவர்களை குறிப்பிடாமல் செய்தி வெளியிடுகிறது. மொட்டையாக இந்த செய்தியை வாசிப்பவன் மனதில், அதிலும் 'கங்கை புனித நீர் கொண்டு வந்த' என கூறப்படும்போது, ஏதோ இந்துக்களால் தாக்கப்பட்டதாக தோன்றும் இல்லையா? பரபரப்புக்காக, அதிகம் பேர் வாசிக்க வேண்டும் என்பதற்காக - இம்மாதிரி விஷமத்தனமான தலைப்பிடுவது மகா அயோக்கியத்தனம். ஏற்கனவே - மத பிரச்சனை இருக்கிற சூழ்நிலையில் இம்மாதிரி தலைப்பிடுவது அறிவுடன் இருப்பவன், தினமணி போன்ற ஊடகம் செய்கிற வேலையாக இருக்காது.
தி.க.வினரின் விடுதலை பத்திரிகையோ, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் தீக்கதிர் பத்திரிகையோ, "அப்படி செய்தி வெளியிட்டிருந்தால், அவர்களின் யோக்கியதை அப்படியானது தானே, அவர்கள் அப்படி செய்தி போடவில்லை என்றால் தானே ஆச்சரியம் என சொல்லலாம். ஆனால் விடுதலையை பார்த்து, தீக்கதிரை பார்த்து, பித்தலாட்டத்தை தினமணியும் கற்று கொள்ள முயல்கிறது என தான் சொல்ல வேண்டும் - அதன் சமீபகால நடவடிக்கைகள் அவ்வாறாக உள்ளது. தினமணியை கி.வீரமணியும், விடுதலையும் விமர்சித்துள்ளது. அது பெரும்பாலும் சாதிரீதியான விமர்சனமாக தானிருக்கும். நாம் விடுதலை வீரமணியை போல் அவ்வித அரைவேக்காட்டுதனமாக இல்லாமல் தினமணியின் அறிவு நாணயத்தையே கேள்வி எழுப்புகிறோம்.
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...