Sunday, December 4, 2022

யூதர்களின் விருப்பமான இடமாக இந்துஸ்தானமே இருந்தது.

 அந்த முன்னாள் இந்திய தளபதி பலருக்கும் தெரியாது, 1971ல் இந்தியா பாகிஸ்தான் யுத்ததின் பொழுது மாபெரும் சாகசத்தை அவர் செய்தார்

அவர் பெயர் Jack Farj Rafael Jacob
அவர் லெப்டினென்ட் ஜெனரல் தரத்தில் இருந்தார், அவர் அன்று காட்டிய மாவீரம் சிலாகிப்புகுரியது, இதே டிசம்பர் 12ம் நாள் அது
அந்த ரபேல் ஜாக்கெப் ஒரு யூதர், பாக்தாத் யூதர். ஆம் அவர் ஈராக் பக்கம் வாழ்ந்த யூத குடும்பம், 17ம் நூற்றாண்டில் வியாபாரத்துக்காக கல்கத்தா வந்த குடும்பத்து வாரிசு. யூதர்கள் எங்கிருந்தாலும் யூதரே, எக்காலமும் யூதரே என்பதால் அவரும் யூத இந்தியராகவே வளர்ந்தார்
எக்காலமும் இந்தியாவே தங்களுக்கு பாதுகாப்பான நாடு, இந்துக்களுடன் வாழ்வதே தங்களுக்கு பாதுகாப்பானது என்பதை பார்சிக்களும் யூதர்களும் மனமார உணர்ந்திருந்தனர், இதனால் யூதர்களின் விருப்பமான இடமாக இந்துஸ்தானமே இருந்தது
மிக தேர்ந்த வீரரான அவரை அரேபியாவில் ஊடுருவ முயன்ற எதிரி படைகளுக்கு எதிரான படையில் களமிறக்கியது பிரிட்டன், ஜேக்கப் பாக்தாத் யூத வம்சமாக இருந்ததால் அட்டகாசமாக போரிட்டார், அந்த வெற்றி அவரை துனிசியாவுக்கு அனுப்பியது
இஸ்ரேல் வரலாற்றில் பிரிட்டிஷ் இந்திய உறவு குறிப்பிடதக்கது, காரணம் முதல் உலகபோரிலே பிரிட்டனுடன் மைசூர், ஐதரபாத், ஜோத்பூர் படைகள் அன்றைய பாலஸ்தீனம் சென்று ஹைபா நகரை மீட்டது வரலாறு , சில ஆண்டுக்கு முன் பெஞ்சமின் நேதன்யாகு அதை நினைவு கூர்ந்தார்
அந்த வீரர்களின் நினைவால் அமைக்கபட்டதுதான் டெல்லி தீன்மூர்த்தி பவன்
அந்த வகையில் பாலஸ்தீனத்தை சுற்றி பிரிட்டிஷ் இந்திய படைகள் 1940களில் நின்றன‌ அதில்தான் ஜேக்கப் இருந்தார்
இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் உலகின் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து பயிற்சிகொடுத்தது பிரிட்டன், லெப்டினென்ட் ஜெனரல் என தரம் உயர்த்தபட்ட ஜேக்கப்பும் அமெரிக்கா சென்றார், அன்றே பலதரபட்ட சிறப்பு பயிற்சிகள் அவருக்கு வழங்கபட்டன‌
அப்பொழுது இஸ்ரேல் உதயமாயிற்று, உலகெல்லாம் இருந்து யூதர்கள் இஸ்ரேலுக்கு சென்றனர், மிக சிறந்த தளபதியான ஜேக்கப்பும் இஸ்ரேல் வருமாரும் தளபதி பொறுப்பை ஏற்குமாறும் வேண்டுகொள் விடுக்கபட்டது, பென் குரியனே அழைத்தார் என்கின்றது வரலாறு
ஆனால் நான் இந்தியன் என வரமறுத்து இந்தியாவிலே இருந்தார் ஜேக்கப்
இந்திய பிரிவினையும் இன்னும் பலவும் வந்த காலங்களில் ராணுவத்தின் தலைமகனாக அவர் இருந்தார், 1948 மற்றும் 1965 யுத்தங்களில் அவரின் பங்களிப்பு பிரமாதமாய் இருந்தது
இந்நிலையில்தான் 1971 யுத்தம் வெடித்தது, அது மார்ச்சில் வெடித்தாலும் டிசம்பர் வரை நீண்டது
இரு விஷயங்கள் அதை நீட்டித்தன முதலாவது பாகிஸ்தானின் நீர்மூழ்கிகள், அமெரிக்க ஆதரவில் அவை பலமாய் இருந்தன, ஹாஜியினை டிசம்பர் முதல்வாரத்தில் சோலி முடிக்கும் வரை இந்தியா கவனமாய் ஆடியது
ஹாஜி மூழ்கடிக்கட்டது என்றவுடன் அமெரிக்கா களமிறங்க முனைந்தது, அதாவது கிழக்கு பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைதிபடை என தன் படையினை அனுப்ப அது முடிவு செய்தது, சீனாவின் மாவோ என்பவருக்கு சீன படைகளை அனுப்பி அப்படியே நாலந்துலா கணவாயினை வெட்டி கிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்கும் திட்டம் இருந்தது
உலக நெருக்குதல் அதிகமாக, மிக சில நாட்களில் போரை முடிக்க வேண்டிய நிலைக்கு வந்தது இந்தியா
கிழக்கு பாகிஸ்தானில் சில லட்சம் வீரர்களோடு இருந்தார் பாகிஸ்தான் ஜெனரல் நியாசி, ஆசாமி சாதரணமானவர் அல்ல , வெகு திறமையானவர் அதே நேரம் கடுமையானவர்
அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ள இந்தியாவின் படைகள் நிரம்ப யோசித்தன, மானெக்ஸா பொறுப்பை ஜேக்கப்பிடம் கொடுத்தார், “ஜேக்கப் உங்களிடம் இருப்பது இந்தியாவின் பாதுகாப்பும் எதிர்காலமும், சிறிய சொதப்பல் நிகழ்ந்தாலும் கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவின் பெரும் தலைவலியாகிவிடும், நீங்கள் இதை வெற்றிகரமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு”
ஜெக்கப் பொறுப்பேற்றார், அந்த வியூகம் இன்றளவும் பாராட்டதக்கது, யூத மூளையோ என்னமோ மிக மிக தேர்ந்த திட்டம் அது
ஆம், போர் நடத்தி அவகாசம் கொடுப்பதை விட, துரித கதியில் அந்த நியாசி கழுத்திலே கத்தி வைத்துவிட்டால்? , சிரமம்தான் வாய்ப்பில்லைதான் ஆனால் அதை தவிர வேறு வழியில்லை , கால அவகாசமில்லை
டாக்காவில் நியாசி இருந்த பகுதியில் விமானப்படையில் துரித தாக்குதலை நடத்தினார், பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய கடற்படை குழப்பியது, சப்ளை இல்லாமல் பார்த்து கொண்டது
விமானபடை மூலம் தாக்குதல் நடத்தியபடியே தன் அடுத்த திட்டத்தை அரங்கேற்றினார் ஜேக்கப்
ஆம், வங்கதேசத்தின் ஆறுகள் வழியே இந்திய கப்பலில் இருந்த வீரர்கள் டாக்காவுக்குள் புகுந்தனர், ரப்பர் படகுகளில் வங்க ஆறுகள் வழியே ஊருக்குள் புகுந்து அசத்தியது இந்திய ராணுவம்
எல்லை தாண்டி நிலம் வழியாக வரும் அல்லது கப்பலில் துறைமுகம் வந்துதான் இந்திய ராணுவம் வரும் எனஎதிர்பார்த்த நியாசிக்கு இப்படி ஆறுகள் மூலம் வந்தது பெரும் அதிர்ச்சி
இது யாருமே எதிர்பாரா அதிர்ச்சி, விடாகண்டன் நியாசி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ஒரே நாளில் டாக்காவினை தன் கட்டுபாட்டில் கொண்டுவந்தார் ஜேக்கப், பாகிஸ்தான் அரண்டது
ஆறுகள் மூலம் ஊடுருவது பலனளிக்காது இதனால் நம் படை நியாசியிடம் சிக்கும் என பல தளபதிகள் பின்வாங்கியபொழுது அதை வெற்றிகரமாக நடத்திகாட்டினார் ஜேக்கப்
ஆயினும் நியாசி சாகசம் நிகழ்த்துவார் என எதிர்ப்பார்ப்பு இருந்தது, பதைபதைப்பான நேரம் அது, அந்நேரம் ஜேக்கப் காட்டியவீரமே அவரின் துணிச்சலை உலகுக்கு சொன்னது
1 லட்சம் வீரர்களுடன் நியாசியினை இந்திய ராணுவம் சுற்றிவளைத்த நிலையில் அதாவது 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் நடுவில் இருந்த நியாசியினை தனி மனிதனாக ஆயுதம் ஏதும் இன்றி காண சென்றார் ஜேக்கப்
கொஞ்சம் நினைத்து பாருங்கள், தோல்வியின் விளிபில் இருக்கும் எதிரிபடையிடம் தனியாக ஆயுதமின்றி செல்ல எவ்வளவு தைரியம் வேண்டும்?
தில்லாக சென்று நியாசியினை சந்தித்து அவர்கள் சிக்கியிருக்கும் நிலமையினை விளக்கினார், இனி பாகிஸ்தான் ஒரு அடி கூட எடுத்துவைக்கமுடியாதபடி அவர்கள் சிக்கியிருப்பதை சொல்லி சாகின்றீர்களா? சரணடைகின்றீர்களா? என அவர் கேட்டபொழுது நியாசி ஆடிபோய் இருந்தான்
தனி மனிதனாக பாகிஸ்தான் ராணுவ தலமையகத்தில் புகுந்து அவர்களை எச்சரித்த ஜேக்கப்பின் வீரம் முன்னால் நிற்கமுடியா பாகிஸ்தான் சரணடைந்தது
சம்பிரதாயத்துக்கு டிசம்பர் 16 போர் முடிந்ததாக சொன்னாலும் 12ம் தேதியே முடித்து வைத்தார் ஜேக்கப்
மாபெரும் வெற்றியினை அவரால் தேசம் பெற்றது, அந்நிய படைகள் புகமுடியாமல் சட்டென போரை முடித்த அவரின் வீரமும் விவேகமும் மெச்சபட்டது
மிகபெரும் விருதுகளும் பதவிகளும் வந்தன‌
கோவா மற்றும் பஞ்சாப் ஆளுநராகவும் பதவி வகித்தார்
இந்திய இஸ்ரேல் உறவுகள் அவரால் ஆரம்பிக்கபட்டன , மொரார்ஜி தேசாய் காலத்தில் இஸ்ரேலின் மோஷே தயானுடன் சேர்ந்து பாகிஸ்தான் அணுவுலைகளை நொறுக்க துடியாய் துடித்தார் ஜேக்கப், ஆனால் மொரார்ஜி மறுத்தார்
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ஜேக்கப், எமர்ஜென்ஸிக்கு பின்பு இந்திராவுக்கும் அவருக்கும் பொருந்தவில்லை
வாஜ்பாய் காலத்தில் மறுபடியும் இஸ்ரேல் இந்திய உறவுக்கு பாடுபட்டார், கார்கில் சண்டையின்பொழுது முடியா வயதிலும் பல நுணுக்கங்களை சொன்னார்
எதிர்ப்பு ஏவுகனைகள் இந்தியாவுக்கு வருவதில் மிகுந்த கவனமாய் இருந்தார், ஏவுகனை ராணுவவியலில் அவருக்கு தனி திறமை இருந்தது, கலாமுக்கும் அவருக்கு அலுவலகத்துக்கு அப்பாலும் நட்பு இருந்தது
மோடி பிரதமரான பொழுது இந்நாட்டின் ஏவுகனை மற்றும் பாதுகாப்பில் கருத்துக்களை அவரிடம் கேட்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்
ஆம் சோனியாவோ மன்மோகனோ இந்த மாவீரன் ஜேக்கப்பினை ஒதுக்கி வைத்த நிலையில் மோடியே அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார், அவரின் ஆலோசனைகளை நிரம்ப பெற்றார்
அமெரிக்காவின் பேட்ரியாட் ரகமா ரஷ்ய எஸ் 400 ரகமா எது சிறந்தது எனும் முடிவினை இங்கு எடுத்தது ஜேக்கப். ஆம் 1941ல் தொடங்கிய அவரின் சேவை 2016 வரை இருந்தது
காந்தி காலம் தொடங்கி மோடி காலம் வரை இங்கு பெரும் சேவையாற்றியவர் அந்த ஜேக்கப், அந்த சாதனை சாமானியம் அல்ல, வரம்.
இந்த தேசம் மறக்க முடியா மாவீரன் ரபேல் ஜேக்கப்
யூதனாய் இருந்தும் கடைசி வரை 92 வயதில் இறக்கும் வரை இந்தியனாய் இருந்தார், இஸ்ரேல் எவ்வளவோ கேட்டபொழுதும் அங்கு செல்ல மறுத்துவிட்டார், நல்ல இந்தியனுக்கு எக்காலமும் அவர் சான்று
இங்கு இருந்து கொண்டு ஈழதமிழனுக்கு சிங்கி அடித்து பிச்சை எடுக்கும் சில இந்திய ஜென்மங்கள் வாழும் நாட்டில், இங்கு இருந்துகொண்டு வங்கதேசத்தவனுக்கும் பாகிஸ்தானிக்கும் வக்கலாத்து வாங்குபவன் இருக்கும் நாட்டில் “வா உன்னை தலமை தளபதி ஆக்குகின்றேன்” என தன் சொந்த இனம் அழைத்தபொழுதும் மறுத்த அந்த உத்தமன் ஜேக்கப் மாபெரும் அதிசயமே
நாட்டுபற்று என்பது அதுதான்
டிசம்பர் 12 , அவன் தனி மனிதனாய் லட்சம் பாகிஸ்தானியர் ராணுவத்துக்குள் புகுந்து அவர்களின் தலைவன் நியாசியினை எச்சரித்த தினம்
அப்படி ஒரு காட்சி உலக அரங்கில் என்றுமே நடந்ததில்லை, நடக்க வாய்ப்பே இல்லை
இன்றளவும் அந்த டாக்கா முற்றுகை எல்லா ராணுவ பள்ளிகளிலும் பாலபாடம், எப்படி எல்லாம் வழிகளை கண்டறிந்து புகவேண்டும் ? முற்றுகையிட்டு நெருக்கடி கொடுத்து எதிரியினை இழுத்துவர வேண்டும் எனபதற்கான பாடம்
ரபேல் என்றால் பாதுகாக்கும் தூதன் என பொருள், அந்த ரபேல் ஜேக்கப் இந்நாட்டினை காக்க வந்த தூதனாய் இருந்தான், அவன் புகழ் எக்காலமும் இங்கு வாழும்
இஸ்ரேலின் புகழ்பெற்ற தளபதி மோசே தயான், அவனுக்கு அடுத்து பிரசித்தியானவர் அந்த ஜேக்கம்
ஆம், இந்தியாவின் மோஷே தயான் அந்த சுத்தமான இந்தியன்.
May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...