ஒரு ஊரில் பிரபலமான வைர வியாபாரி இருந்தார்.அவருக்கு ஒரேயொரு மகள்.அழகுன்னா அழகு.....அவ்ளோ அழகு.
அப்பா வியாபரத்தில் பிரபலம்..மகள் அறிவிலும் அழகிலும் பிரபலம்.
அந்த பொண்ணு பேரு கூட .
பிரபலா ன்னா..
பார்த்துக்குங்க.
ஆனால் மகளோ அவர் மாளிகை அருகில் சிறிய கடை நடத்தி வரும் ஓவியர் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தாள்.அவரையே மணமுடிக்கவும் உறுதி செய்திருந்தாள்.
இதையறிந்த தந்தை மிகவும் கோபமடைந்தார்.எந்த காரணத்திற்காகவும் இந்த திருமணம் நடக்காது என்று உறுதியாக கூறினார்.
தந்தையின் முடிவை கேட்டு வருத்தமடைந்த மகள்
தன் காதலனுடன் ஊரைவிட்டு ஓடிப்போக தீர்மானிக்கிறாள்.
மறுநாள் இரவு தனக்கு தேவையான உடை மற்றும் பயண செலவுக்கும் சிறிது பணமும் எடுத்துகொண்டு வெகுதொலைவில்
உள்ள தனது நண்பியின் ஊருக்கு சென்றார்கள்.
அங்கு திருமணம் செய்து சுகமாக வாழ தொடங்கினார்கள்.
இங்கு தந்தையின் நிலை மிகவும் கவலைக்கிடமானது.தனது
ஒரே மகளை பிரிந்து ..அவரால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை.
மனதை திடப்படுத்திக்கொண்டு..மணமக்களை வீட்டிற்கு அழைத்து வர தீர்மானித்தார்.
உடனே எல்லா ஊர்களுக்கும் தனது மகள் மருமகன் புகைப்படத்தை அனுப்பி..அதில் அவர்கள் திரும்பி வரவேண்டும் என்றும்..தானே திருமணத்தை நடத்தி தருகிறேன் என்றும் விளம்பரப்படுத்தினார்.
வெகுதினங்கள் கழித்து தந்தையின் நிலை
மகளின் காதுக்கெட்டியது.இருவரும் திரும்பிசெல்ல ஆயத்தமானார்கள்.
தோழிக்கும் அவர் குடும்பத்தார்க்கும் நன்றி சொல்லி...ஊருக்கு புறப்பட்டனர்.
செய்தியறிந்து தந்தை இருவருக்குமான துணிமணி ..நகைகளை
எல்லாம் வாங்கி..வீட்டை அலங்காரம் செய்து புது தம்பதியரை
வரவேற்க தயார் ஆனார்.
ஆனால் விதி வலியது அல்லவா...
நள்ளிரவு.மகள் மற்றும் கணவன் பயணித்த வண்டியின் மேல ஒரு லாரி மோதியது.
அந்த இடத்திலயே கணவன் உயிர் இழந்தான்.
மகள் பெருங்காயத்துடன் உயிர்தப்பியிருந்தாள்.அவளது
உடை முழுவதும் கணவனின் இரத்தம் படிந்திருந்தது.
அடுத்த சில வாரங்கள் அந்த மாளிகையில் மயான அமைதி.
மகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று மேலும் வியாபாரியின்
உடல் கவலைக்கிடமானது.
மகளோ இரத்தத்தில் ஊறிய அவள் உடைகளை கட்டிபிடித்து எந்நேரமும் அழுது கொண்டிருந்தாள்.
வியாபாரி தன் மகளை அழைத்து அறிவுரை கூறினார்.
இப்படியே இருந்தால்.என் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்காது.
நீ மறுமணம் செய்ய ஒப்புக்கொள் என்று கேட்டுகொண்டார்.
தந்தையின் நிலை கண்டு இருமனதோடு அவளும் ஒப்புக்கொண்டாள்.
திருமண ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடக்கதொடங்கியது.
ஓர் இரவு வியாபாரி உறங்கிக்கொண்டிருக்கும் போது
அவர் கனவில் முதியவர் ஒருவர் தோன்றினார்.
"கல்யாணம் ஆக சில நாட்களே உள்ளது.உன் மகளின் காதலனின்
இரத்தம் தோய்ந்த உடைகளை உடனே நீ சுத்தம் செய்.அதில் இருக்கும் ஒவ்வொரு துளி இரத்தமும் அவளது உயிருக்கே ஆபத்து
என்று எச்சரிக்கை செய்து மறைந்தார்.
ஆனால் வியாபாரியோ..இது எதோ கற்பனை என்று அதை அத்தோடு மறந்தார்.
அடுத்த நாள் அவளது தாயார் கனவிலும் முதியவர் தோன்றினார்.
கல்யாணம் ஆக இன்னும் மூணு நாட்களே உள்ளது.உன் மகளின் காதலனின்
இரத்தம் தோய்ந்த உடைகளை உடனே நீ சுத்தம் செய்.அதில் இருக்கும் ஒவ்வொரு துளி இரத்தமும் அவளது உயிருக்கே ஆபத்து"
என்று எச்சரிக்கை செய்து மறைந்தார்.
தாயாரும் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.
மறுநாள்.அந்த முதியவர் மகளின் கனவில் தோன்றினார்.
கல்யாணம் ஆக இரண்டு நாட்களே உள்ளது.உன் காதலனின்
இரத்தம் தோய்ந்த உடைகளை உடனே நீ சுத்தம் செய்.அதில் இருக்கும் ஒவ்வொரு துளி இரத்தமும் உனது உயிருக்கே ஆபத்து"
என்று எச்சரிக்கை செய்து மறைந்தார்.
அலறி எழுந்த மகள்..தாய் தந்தையிடம் இதை உடனே தெரிவித்தாள்.
அவர்களும் ஒருவரைஒருவர் பார்த்துகொண்டு.."எங்களுக்கும்
இதே போன்று கனவு வந்தது,இதை இலகுவாக எடுத்துக்கொள்ளகூடாது இப்போதே அதை செய்வோம் என்று
அந்த துணிகளை கழுவதொடங்கினர்.
ஒரு பிரயோசனம் இல்லாமல் போனது..துணியில் இருந்து
சிறிதளவு கூட இரத்தகறை போகவில்லை.
அடுத்தநாள் இரவும்....அந்த முதியவர் கனவில் தோன்றி,
"இன்னும் ஒரு நாளே உள்ளது..
இரத்தம் தோய்ந்த உடைகளை எப்படியாவது நீ சுத்தம் செய்.
என்று மீண்டும் எச்சரிக்கை செய்து மறைந்தார்.
மறுநாள் வீட்டில் உள்ள எல்லோரும் திருமண வேலைகள்
கவனிக்க வெளியே செல்ல.மகள் தனித்துவிடப்பட்டாள்.
அவள் மீண்டும் அந்த துணிகளை கழுவதொடங்கினாள்.
ஆனால் கறை போவதாக இல்லை.அவள் அழத்தொடங்கிவிட்டாள்.
அப்பொழுது கதவை வேகமாக யாரோ தட்டும் சப்தம்.
பயத்தில் அவளுக்கு உடல் முழுவதும் வேர்க்க தொடங்கியது.
இன்னும் ஒருநாள் முடிய சில மணிநேரங்கள் உள்ளதே..
மரணம் அதற்குள் தன்னை நெருங்கிவிட்டதாக உணர்ந்தாள்.
கதவு தட்டும் சப்தம் இப்பொழுது வேகம் கூடியிருந்தது.
அவளுக்கு தெரிந்த அத்தனை கடவுள் பெயரையும் துணைக்கு அழைத்து..கதவருகே சென்றாள்.
கதவை மெதுவாக திறக்க முற்பட்டாள்.அதற்குள் கதவு வேகமாக
திறந்து கொண்டது. புகைமண்டலமாக இருந்த வெளிபுறம்..அதில்
இருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது.அது வேறு யாருமல்ல
கனவில் தோன்றிய அதே முதியவர்.
அவளது பயத்தையும் கண்ணீரையும் கண்ட முதியவர்.
அவளிடம் ஒரு பொட்டலத்தை நீட்டினார்.
அவளிடம் இப்படி கூறினார்....
"ஏரியல்".....
"எந்த விடாப்பிடியான கறைகளையும் நீக்க..
ஒரே வாஷில்...."
"பால் போலே வெண்மை
துணிகளுக்கு தரும் மேன்மை..."
"ஏரியல் உபயோகியுங்கள்
கறைகளை காணாமல் செய்யுங்கள்"
---------------------
வாசிக்கும் பழக்கம் அறிவை வளர்க்கும்.
இதை முழுவதும் ஆர்வத்துடன் பொறுமையாக படிக்க மனது வைத்ததற்கு நன்றி.!!
நீண்ட கதை கட்டுரை வாசிக்கும் பழக்கம் நம்மில்
குறைந்துவருகிறது.
அப்புறம் கையில் கட்டையோடு என்னை தேடாதீங்க...
இதை எனக்கு அனுப்பியவனை தேடி
நானும் புறப்பட்டு போய்கிட்டு இருக்கேன்...!!!!!
No comments:
Post a Comment