Saturday, July 1, 2023

நீங்களும் நானும் கேள்வி கேட்டால் வம்பு, நாலு பேர் திட்டுவார்கள்.

 எனக்கு ஒரு சந்தேகம். பிரபலங்களுக்கு ஆஜராகும் வழக்குறைஞர்கள் ஜாம்பவான்கள். உதாரணத்துக்கு செந்தில் பாலாஜிக்கு ஆஜராகும் முன்னாளைய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி (ஒரு நாளுக்கு கூலி ₹22 லக்ஷமாம்!). வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு ஆண்டு சம்பளம் ₹30 லக்ஷத்தைத்தாண்டுவதே சந்தேகம். அதுவும் இப்போது வழக்கு நிலுவையில் உள்ளது மாகாண அளவிலான உயர்நீதிமன்றத்தில்தான். தலைநகர் டில்லி உச்சநீதி மன்றம் கூட இல்லை. சட்ட நுணுக்கங்களை பிட்டுவைக்கும் தோரணையிலேயே பிரமித்து அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் சாத்தியகூறுகள் அதிகம் என்று சாமானியனுக்குக்கூட தோன்றும் இல்லையா? அதனால்தான் பணமுதலைகள் இந்த ஜாம்பவான்களை களத்தில் இறக்குகிறார்களோ? பணத்தை தண்ணீர்(?) போல் இறைக்கிறார்களோ?

இந்த செலவையும் தன் வருமான கணக்கில் காட்டுவார்களா? அல்லது அமைச்சர் என்பதால் மக்கள் வருப்பணத்திலிருந்துதான் கபளீகரம் செய்யப்படுமா? அதனால்தான் அவரை பதவியிலிருந்து விடுவிக்கவில்லையா?
அமலாக்கத்துறை இந்த சாதாரண விசாரணை நடவடிக்கை எடுக்கக்கூட இவ்வளவு தடைகளா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இவ்வளவு சட்டப்பாதுகாப்பா? ஆனால் இது முதலைகளுக்கு மட்டும்தான். நீங்களும் நானும் கைகாட்டப்படால் சட்டம் மட்டுமல்ல ஆண்டவன் கூட உதவிக்கு வரமாட்டான்.
பணம் பாதாளம் வரை பாயும் ஏனென்றால் அதற்கு பிணமும் வாயை திறக்கும்! ஹூம்…..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...