கிட்டத்தட்ட நூறு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர், துணை முதல்வர் போன்ற பொறுப்புகளை வகித்தவர், வலிமையான தலைமை இல்லாத ஆளுங்கட்சியை (ஆனால், முதல்வர் மனவுறுதி மிக்கவர் என்பது நேற்று வேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பறைசாற்றியது) அப்புறப்படுத்த பகீரதப் பிரயத்னம் செய்கிறார். ஒரு அங்குலம்கூட நகர மாட்டேன்கிறது!
தனது இயலாமையை வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின். ஆளுநரிடம் மன்றாடுகிறார். கணக்கு தெரியாத ஆளுநர் என்று மேடையில் முழங்கிவிட்டு, அவரிடமே மடிபிச்சை கேட்கிறார். ஆளுங்கட்சி நம்பிக்கையை நிரூபிக்க, ஆளுநர் பணிக்க வேண்டுமாம்! ஏதோ ஒன்றிரண்டு எம்.எல்.ஏ. வைத்துள்ள கட்சிக்காரன் இப்படிக் கோரினால் தவறில்லை. ஆட்சிக்கு வெகு அருகில் என்ற நிலையில் எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளவர் இப்படிப் புலம்பினால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய?
துணிவிருந்தால், சபாநாயகரை சந்தித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டியதுதானே! அதில் வெற்றிபெற முடியாது என ஸ்டாலினுக்கு தெரியும். தினகரன் காலை வாரிவிட்டு விடுவார் என்ற பயம் அவருக்கு இருக்கிறது. அதனால்தான், தன் பலவீனத்தை மறைக்க ஆளுநர் மீது பழி போடுகிறார். இவர் நீதிமன்றம் சென்றாலும் பலனிருக்காது. எந்த நீதிமன்றமும் ஆளுநருக்கு இந்த விஷயத்தில் உத்தரவிட முடியாது!
ஆளுநரை பொறுத்த மட்டில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை மாற்ற கோரியுள்ளார்கள். இதை ஆளுநர் செய்ய முடியாது. அது அவர்கள் உட்கட்சி விவகாரம். அவர்கள்தான் கூடி முடிவெடுத்து முதல்வரை மாற்ற முடியும். அதனால்தான் அவர் தயங்குகிறார். சிலர் கூறுவது போல, பன்னீர் செல்வம் விஷயத்தில் முன்பு இவ்வாறு நிகழவில்லை. அவருக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை, மிரட்டப்பட்டார் போன்ற வேறு பல காரணங்கள் இருந்தன!!
ஆக, செயல் தலைவர் இப்போதைக்கு செயலற்று கிடக்க வேண்டியதுதான்!
No comments:
Post a Comment