மக்களின் எழுச்சியைக் கண்டு, கண்டும் காணாதது போல இருந்து கொண்டு, இருக்கிற காலம் வரை ஆட்சியை தொடரலாம் என்கிற எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருந்தால் அது தவறான பாதைக்கு வழிவகுத்து விடும்.
இன்று தமிழக ஆட்சியாளர்கள், தங்களது இயலாமையினால், வெட்கி தலைகுனிந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இப்போதாவது, பதவி சண்டையை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.
தவறான வழியில் எவ்வளவு சம்பாதித்தாலும், நாம் செய்யும் நேர்மையான நல்ல செயல்பாடுகள் தான், எந்தகாலத்திலும் பேசவைக்கும். நிலையான புகழும் கிடைக்கும்.இதனை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ளவேண்டும்.
இறந்து போன மாணவியின் உயிர் திரும்பி வரப்போவதில்லை. அவளது சூழலில் அவள் படித்து பெற்ற மதிப்பெண் என்பது மிகப்பெரியது. இன்று அவள் மரணித்திருக்கலாம். ஆனால் அவள் விதைத்த விதை சற்றே அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. மக்களை தட்டி எழுப்பி உள்ளது. அனிதாவை போல பல அனிதாக்கள் தமிழக கிராமங்களில் வாழ்கிறார்கள். அவர்களது கனவுகளை நனவாக்க வேண்டியது அரசின் கடமை.
வேறு பிள்ளைகள் இப்படிப்பட்ட விபரீத முடிவை எடுக்காத வண்ணம் பார்க்க வேண்டியது ஒரு அரசின் கடமை.
முதலில் மக்களின் நம்பிக்கையை பெரும் விதமான நடவடிக்கைகளில் அரசு இரங்கவேண்டும்.
அப்பழுக்கற்ற திறமையான அதிகாரிகளை களத்தில் இறக்கி மக்களின் நம்பிக்கையினை பெற முயற்சிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழக மக்களும் உற்று நோக்கும் இத்தறுவாயில் மக்கள் எதிர்ப்புகள் பல இருந்தாலும் மாணவி. அனிதாவின் இல்லத்திற்கு அமைச்சர்கள் கண்டிப்பாக செல்ல முயற்சிக்க வேண்டும். அனிதாவின் பெற்றோர்களிடமும் தமிழக மக்களிடமும் தமிழக அரசு மன்னிப்பு கோரவேண்டும். இதனால் அரசு ஒன்றும் குறைந்து போகப்போவதில்லை.
No comments:
Post a Comment