Sunday, September 3, 2017

மழையும் இறை கொடையும் :-

வானவியல் சாஸ்திரத்தில் மிக சிறப்பாக விளங்கிய (கிரகண கணக்குகள் மிக மிக கடினமானவை , பூமி உருண்டை என்று நானூறு வருசத்துக்கு முன்னாடி சொன்னதுக்கு இயேசு குத்தம் ஆனவங்க கதை உங்களுக்கு தெரியும் !!) நம் முன்னோர்கள் .. ஒரு விசயத்தில் தெளிவாக இருந்தனர் !!
மழை .....
மழை நீர் இறைவன் கொடையாக கருதி .. சைவத்தில் சிவபெருமான் சிரசில் தாங்கி அதை பூமிக்கு வழங்கினார் என்றும் .. பல கோவில்களில் சிலைகளை வடித்து வணங்கினாலும் கோபுர மற்றும் சிறப்பான கர்பக்ரஹ விமானங்களை அமைத்து மழை நீரை அதில் பட்டு பூமியில் தனித்தன்மையாக ஒடுமென்றால் நன்மை பயக்கும் என்று செய்து வைத்தனர் ..
இந்த கர்பக்ரஹ விமானங்களில் படுகின்ற நீர் வேறு எதிலும் கலக்காமல் .. அதை சுற்றி ஒரு இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு இருக்கும் .. நீர் விமானத்தில் வீழ்ந்து .. நேரே புனித குளத்தினுள் செல்லும் படியாக !!!
ஸ்ரீரங்கத்திலும் விமானத்தில் விழுகின்ற நீர் ஒரே ஒரு தாரை வழியாக செல்லும் காட்சியை காணொளியாக எடுத்து இருக்கிறேன் !!
இந்த ஓவொரு துளி நீரும் நமது நாட்டின் செழுமைக்கு இறைவன் அளிக்கும் கோடை என்று நினைத்து நாம் அரங்கனுக்கு நன்றி செலுத்துவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...