Saturday, September 9, 2017

நாட்டில் எவ்வளவு பேர் ஒரு வேலை உணவுக்கு உத்தரவாதம் இன்றி தவிக்கின்றனர்.

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நியாயமற்றது. அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேர். 8 கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டில் 1 சதவிகிதத்துக்கும் கீழ் இருக்கிற அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 41% (ஊதியம் - 47000 கோடி, பென்ஷன் - 21000 கோடி) செலவிடப்படுகிறது. . 2020ல் பெற வேண்டிய ஊதிய உயர்வை 2010லேயே தமிழக அரசு ஊழியர்கள் பெற்று விட்டனர். எனவே அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்
தெரிந்தே புதிய பென்சன் திட்டப்படி வேலையில் சேர்ந்துவிட்டு தற்போது பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோருவது நியாயமா?
லஞ்ச- ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களை யூனியன்களில் இருந்து நீக்குவோம், அரசு அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரு அம்ச கோரிக்கையுடன் போராட தயாரா?
சம்பளம் சரி.. 'கிம்பளம்' என்ற ஒரு வார்த்தையை உருவாக்கிய அரசு ஊழியர்களே.. என்றாவது ஊதிய உயர்வு அற்ற போராட்டத்தில் மக்கள் நலனுக்காக மட்டும் இறங்கி போராடி உள்ளீர்களா?
அரசு ஊழியர்களே - ஆசிரியர்களே உங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை வெளி கொண்டுவர நீங்கள் தயாரா?
வருடந்தோரும் உங்கள் சொத்து விவரங்களை வெளியிட நீங்கள் தயாரா?
பாக்கெட்டில் இருக்கும் பத்து ரூபாயையும் லஞ்சமாக பிடுங்கி தன்மானத்தை இழந்து பிச்சை எடுப்போரை யூனியன் என்ற பெயரில் அவர்களை காப்பாற்றுவதை நிறுத்துவீர்களா?
அரசு செய்வது தொழிலல்ல, சேவை! என்றாவது சேவை மனப்பான்மையுடன் அலுவலகம் சென்று வந்திருக்கிறீர்களா? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் அலுவலகம் வரும் மக்களை, மக்களாக நினைத்து உரிய மரியாதையுடன் சேவை கொடுத்திருக்கிறீர்களா?
பல நிகழ்வுகளில் நல்லவன் போல அரசியல்வாதிகள் மீது ஊழல் முத்திரை குத்தும் நல்லவர்களே.. உங்கள் உறுதுணை இல்லாமல் ₹1 பைசா ஊழல் கூட நடக்க முடியாது. தமிழக சீரழிவிற்கு நீங்கள் ஆற்றிய இந்த பெருந்தொண்டை ஒப்புக் கொள்வீர்களா??
மக்களுக்கு தடையின்றி வழங்கப்பட கூடிய அரசு சேவைகளின் மக்கள் சாசனம் (Citizen Charter) தத்தம் அலுவலகத்தில் மக்களின் பார்வைக்காக வைப்பீர்களா?
மூன்று மாதங்கள் முன்பே ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்து அடையாள வேலைநிறுத்தம், போராட்டங்கள் மட்டுமே தங்களுடைய ஒரே வேலை என்பது போல் செயல்பட்டு அரசுக்கு கெடு விடுத்து கொண்டு இருக்கும் அரசு ஊழியர்களை இந்த அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது வியப்பளிக்கிறது.
அரசாங்கம் வேலை கொடுக்கும் அட்சய பாத்திரமும் அல்ல, மக்கள் வரிப்பணம் முழுவதும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் சம்பளத்திற்காக மட்டும் அல்ல.
முதலில் விரைவான வெளிப்படையான இலஞ்ச – ஊழலற்ற அரசு நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்க அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களே முன் வாருங்கள்.
சாமானிய மக்களால் அரசு அலுவலுங்களில் சாதாரண சேவையை கூட இடைத் தரகர்கள்,லஞ்சம் இல்லாமல் பெற முடியவில்லை. யாரும் ஏதும் செய்து விட முடியாது என்ற அகந்தையுடன் செயல்படும் அதிகாரிகளுக்கு எதற்கு சம்பள உயர்வு என்று மக்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை. மக்கள் ஊழியர்கள் என்பதை மறந்து மமதையுடன் செயல்படும் அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...