Wednesday, September 13, 2017

திருச்சபையை உருவாக்கியவரின் புனிதம் என்ன?

அட..அங்கேயும் இந்தக் கதைதானா?
அப்படிப் போடு....
.................
எப்பேர்ப்பட்ட திருச்சபை இது ?
இந்த தூய கத்தோலிக்க திருச்சபையை உருவாக்கியவரின் புனிதம் என்ன?
நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சர்வ வல்லவரும் ஏக பரம்பொருளுமான விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஒரே சர்வேசுரனின் திரு சுதனால் உருவாக்கப்பட்ட திருச்சபை எத்தகைய அச்ச நடுக்கத்தோடு இறை பணியாற்ற வேண்டும்?
ஒரு கதையை நாம் அனைவரும் கேள்வி பட்டிருக்கலாம்
ஓருவர் ஒரு நாள் நோன்பிருக்கிறார். அன்றைய தினம் பார்த்து அவருக்கு மிகவும் பிடித்த உணவு இருக்கிறது சாப்பிட ஆசை ஆனால் நோன்பு தினம் என்பதால் தவிக்கிறார்,
சாப்பிடத்தான் கூடாது வாங்கி வைப்பது தப்பில்லை, முகர்ந்து பார்ப்பது தப்பில்லை, தொட்டு பார்ப்பது தப்பில்லை, என சமாளித்து சமாளித்து அவரை அறியாமலேயே உணவை தின்று விடுகிறார்.
அதேபோல் தான் கத்தோலிக்க திருச்சபையிலும் தப்பில்லை தப்பில்லை கலாச்சாரம். பண்பாடு என சமாளித்து சமாளித்து இன்று., திவ்ய திருப்பலியில் கூட ஆண்டவருக்கு அருவருப்பான செயல்களை செய்ய துணிகிறோம்.
Image may contain: 2 people, people standing
விவிலியம் தெளிவாக சொல்கிறது , ஆலயத்தில் பெண்கள் முக்காடிட வேண்டும் என்று,
ஆனால் நாம் முக்காடிடாதது மட்டுமல்ல , முதுகு தெரிய ஆடையணிந்து ஆலயத்தில் மட்டுமல்ல ஆலய பீடத்திலேயே ஏற துணிகிறோமே?
என்ன கொடுமை இது?
எப்படியாவது தூபம் காட்டியே ஆக வேண்டும் என உங்களிடம் கேட்டது யார்? ??
28 தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.
திருத்தூதர் பணிகள் 20

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...