Wednesday, September 13, 2017

முதல்வர் எடப்பாடி அரசை கவிழ்க்கலாம்: சிறையில் இருந்து சசிகலா பச்சை கொடி...

முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் பொதுக் குழுவைக் கூட்டி, கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து சசிகலாவையும், துணைப் பொதுச் செயலர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரனையும் நீக்கி விட்டனர்.
இப்படி நடக்கப் போகிறது என்பதை ஒரு வார காலத்துக்கு முன்பே, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, கட்சியின் கர்நாடக மாநில செயலர் புகழேந்தி சொன்னபோது, அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என சொல்லி, புகழேந்தியை சமாதானப்படுத்தி அனுப்பினார் சசிகலா. கூடவே, பொதுக்குழு நாளில் என்ன நடக்கிறது என்பதை தனக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் சசிகலா கேட்டுக் கொண்டார்.
அதே போல், சசிகலாவுக்கு, பொதுக்குழு தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டன. தன்னை கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர் என்ற தகவல் அறிந்ததும், சசிகலா அப்செட் ஆகி விட்டார்.
இப்போது என்னை, கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கியிருப்பவர்கள் அனைவருக்குமே, ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலராக ஜெயலலிதா இருந்த போது, நான் தான் பொறுப்புகள் தந்தேன்.
ஜெயலலிதா பெயரில் அறிவிப்புகள் வந்தாலும், அதை பின்னணியில் இருந்து செய்தது நான் தான்.
அவர்கள்தான் இப்போது என்னை பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கின்றனர்.
இது தான் உலகம் என்று சொல்லி புலம்பித் தீர்த்திருக்கிறார்.
பதவியில் இருந்து இறக்க வேண்டும்:
உச்சபட்சமாக முதல்வர் பழனிச்சாமி, எனக்கும் அவரை நம்பிய எனது குடும்பத்தாருக்கும் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார்.
அதனால், இனிமேலும், அவரை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்க விடக் கூடாது.
அவரை எப்படியாவது ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறக்கி ஆக வேண்டும்.
அதை நோக்கி அரசியல் செய்வதுதான், இனி, தினகரனின் முழு நேரப் பணியாக இருக்க வேண்டும்.
எதை செய்தால், முதல்வர் பழனிச்சாமி அரசு கவிழுமோ, அதைச் செய்ய வேண்டும்.
இதை எனது #உத்தரவாக#கட்டளையாகவே, தினகரனிடம் சொல்லி விடுங்கள்.
அவர் இனிமேல், ஆட்சியை கவிழ்த்து விட்டு, அந்த செய்தியோடு என்னை வந்து சந்தித்தால் போதும் என, தன்னை சந்திக்க வந்தவர்கள் மூலம் சசிகலா சொல்லி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
அதை வைத்துத்தான், இனியும், என் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள், அரசை நீடிக்க விடுவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக்கூடும் என்று, தினகரன் தெரிவித்து, ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...