Tuesday, September 12, 2017

தன்னம்பிக்கை இல்லாதோரிடம் இயல்பாக எழும் பிரச்சனை யாகும்...

இந்த உலகில் புதிதாக எது வந்தாலும் அதைப்பற்றி புரிந்து கொள்ளாமல் சந்தேகம் கொள்வதும் அதை எதிர்த்து போராடுவதும் தன்னம்பிக்கை இல்லாதோரிடம் இயல்பாக எழும் பிரச்சனை யாகும்...
ஆதிகாலத்தில் மனிதன் காட்டுவிலங்காண்டியாக வாழ்ந்த காலந்தொடங்கி இன்றைய நவநாகரீக காலம்வரையும் இதுவே தொடர்கதையாக இருக்கிறது.
தொடக்கத்தில் வெங்காயம், தக்காளியை பயன்படுத்த தொடங்கிய போது கூட இப்படித்தான் சந்தேகப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தார்...
முதன் முதலாக கணினி கண்டுபிடித்த காலத்தில் இப்படித்தான் எதிர்த்து போராடினான். பல இடங்களில் தொழிலாளர்கள் களின் வாழ்வாதாரத்தை பறிக்க வந்த அரக்கன் எனக்கூறி கணினி உடைப்பு போராட்டம் எல்லாம் நடைபெற்றது.
ஆனால் இன்றைய நவீன உலகில் கணினி, கைப்பேசி இல்லாத வாழ்க்கை யை எண்ணி க்கூட பார்க்க முடியாத நிலையில் மனதவாழ்வு மாறி ப்போனது.
திரு. MG.R. அவர்கள் முதல்வராக இருந்த போது கல்வி யில் தரம் கொண்டு வர
தமிழ்நாட்டில் TNPCEE என்ற நுழைவு தேர்வு எனும் புதிய பரட்சிகரமான முறையை அமல் படுத்தினார்.
அப்போது கூட அனைத்து கட்சி களும் கூட்டணி அமைத்து " நுழைவு நேர்வு நுழைவதா?" என்று மாபெரும் போராட்டமெல்லாம் நடத்தினர்.
பின்னாளில் ஒருமுறை ஆசிரியர் வீரமணி அவர்கள் இவ்வாறு பேசியதை நானே நேரில் கேட்டேன்...
" நுழைவு தேர்வு முறையை MGR அவர்கள் கொண்டுவந்த போது சரியான பரிதல் இல்லாததால் அதை எதிர்த்தோம்.
ஆனால் நமக்கு அனுபவம் கற்றுத்தந்த உண்மை என்னவென்றால் இதை விட சிறந்தவழி எதுவும் இல்லை என்பதே "
இந்த தேர்வு 1984 ல் இருந்து அண்ணா பல்கலை கழகம் மூலமாக தமிழக பாட திட்டத்தில் நடத்தப்பட்டது. இதில் வரும் மதிப்பெண் மற்றும் பொது தேர்வு மதிப்பெண் சேர்த்து தான் அட்மிஷன் நடந்தினார்கள்.
2006 வரை TNPCEE என்ற நுழைவு தேர்வு நடைமுறையில் இருந்தது.
ஆனால் இந்த தேர்வில் நகர் புற மாணவர்கள் தான் தேர்ச்சி பெறுகிறார்கள் கிராமபுற மாணவர்கள் நகர் புற மாணவர்களுடன் போட்டி போட முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் கூறி நுழைவு தேர்வை நீக்கி விட்டார்கள். ஆனால் இது தமிழக பாட திட்டத்தில் நடந்த தேர்வுதான் அதையும் கிராமபுறம் , நகர் புறம் என்றெல் லாம் பிரித்து
அந்த போட்டி தேர்வு முறையையும் ஒழித்துக்கட்டியேவிட்டார்கள்
இந்த தேர்தலில் வெற்றி பெற வழிதேடி எதிர்கால தலைமுறையைப்பற்றி கவலைப்படாத இந்த அரசியில் வியாதிகள்.
இதில் யார் மேல் குற்றம் சொல்ல...
ஒரே பாடத்திட்டம் நகர் புரம் ,கிராமபுரம் என்றார்கள் இது எப்படி நியாயமாகும் .???
வருடந்தோரும் பத்தாம் வகுப்பு மற்றும் +12 வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி விகிதம் பெற்றவர்கள் கிராமபுற மாணவர்களே.!!
2006-2016 வரை எத்தனை அரசு பள்ளிகளில் பயின்ற கிராமப்புர மாணவர்கள் மருத்துவ கல்லூரி யில் சேர்ந்துபயன் அடைந்தனர் என்று இவர்கள் புள்ளி விவரம் வெளியிடுவார் களா???
மேலும் இந்த கால கட்டத்தில் தனியார் கல்லுரியில் சேர்க்க பட்ட மாணவர்களின் மதிப்பெண்களும் வெளியிடப்பட வேண்டும்.
இவர்கள் வெளியிடுவார் களா???
நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி மூன்று ஆண்டுகளுக்கும் முன் கொண்டு வந்த போது இன்றைக்கு தீவிரபோராட்டம் செய்யும் இந்த கட்சிகள் எல்லாம் வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன்...???
சரி ...ஜெயலலிதா ஓராண்டு விலக்கு கேட்டார். மத்திய பாஜக அரசும் கொடுத்தது.. அதன்பிறகாவது அடுத்து ஆண்டு கட்டாயம் நீட் தேர்வு வந்து விடும் என்பதை உணர்ந்து மாணவர்களும் பெற்றோர்களும் தங்களை தயார் படுத்தி இருக்க வேண்டாமா..???
சரி ...தற்போதைய மாநில அரசின் கோரிக்கை யை ஏற்று இந்த ஓராண்டு க்கு மட்டுமாவது விலக்களிக்க மத்திய அரசு முயற்சி செய்த போது... காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் அவர்கள் நீட்தேர்வு க்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் அடிப்படையில் இந்த ஆண்டே நீட் தேர்வை அமல்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை க்கு தமிழக அரசு தள்ளப்பட்டதே.
இன்றைக்கு இந்த நீட்தேர்வு க்கு துளியும் தொடர்பில்லாத பாஜகவை அநாகரிக வார்த்தை களில் விமர்சனம் செய்யும் தனிநபர்கள் ஆனாலும் சரி...எதிர்க்கட்சிகள் ஆனாலும் சரி ...
நீட்தேர்வு க்கு ஆதரவாக நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றம் சென்றபோது இந்த சமூக நீதி காவலர்கள் என வாய்திழிய பேசும் எதிர் கட்சிகள் நீட்தேர்வு க்கு எதிராக வழக்கு போட்டு வாதாடி இருக்கலாமே ஏன் போகவில்லை.
கல்வி கொள்ளையர்கள் தனியார் மருத்துவ கல்லூரியின் முதலாளிகள் தானே தங்களது வருமானம் போய்விடும் என்பதால் நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றம் சென்றனர்.
இனறைக்கு அன்பு மகள் அனிதா வின் தற்கொலைக்கு நீதி கேட்பதாக நாடகமாடுபவர்கள் தான் அனிதா வின் கொலைக்கு காரணமானவர்கள்.!!!
நுழைவு தேர்வு முறை நடைமுறையில் இருந்திருந்தால் ..இந்த நீட் தேர்வு நமது மாணவர்களின் கால் தூசுக்கு கூட சமானமாக இருந்திருக்காது
நிழல் யுத்தம் புரிந்து அடுத்த தேர்தலில் அணிசேர இப்போது போராட்ட நாடகமாடும் அனைத்து கட்சி களே...
மீண்டும் மாணவ சமுதாயத்தை ஏமாற்றி அவர்களின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிடாதீர்கள்...
இனி பாஜகவே நினைத்தாலும் நீட்டை நிறுத்த முடியாது.!!! இதுதான் உண்மை.
பெற்றோர்களே அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்காவது பிள்ளைகளை தயார் செய்யுங்கள்.
அன்பு மாணவ செல்வங்களே..
இந்த சமூக அக்கறை அற்ற அரசியல் வாதிகள் எனும் மண்குதிரைகளை நம்பி போராட்ட ஆற்றில் இறங்காதீர்கள்.
முன்பு நுழைவு தேர்வு இருந்த கால கட்டத்தில்..
இந்த ஆண்டு மருத்துவ இடம் கிடைக்காது என தெரிந்தவுடன் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதி அடுத்த ஆண்டு மருத்துவ சீட் கிடைக்க பாடுபடுவார்கள். அதுபோலவோ அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு இப்போதிலிருந்தே பாடுபடுங்கள்.
அரசியல் கட்சிகள் உங்களை குறைவாக மதிப்பிட்டு உங்கள் அறிவை கொச்சைப்படுத்துகிறார்கள்.
இந்த உலகிலேயே முதல்தர அறிவுள்ள வர்கள் தமிழகர்களே...
இது உலகறிந்த உண்மை.!!!
இந்த நீட் எல்லாம் உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் ஒன்றுமேயில்லை.
நீங்கள் நிச்சயமாக வென்றுகாட்டுவீர்கள்!
வாழ்க வளமுடன்...!!!
வாழ்க வையகம்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...