Monday, December 4, 2017

கள்ளத்தொடர்பு தப்பில்லை: கோர்ட் அதிரடி.

கள்ளக்காதலில் ஈடுபடுவது, நேர்மையற்ற பழக்கமே தவிர, தண்டனைக்குரிய குற்றமில்லை' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2010ல், காதலித்த நபர் ஒருவரை, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், அந்த ஆணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதை தட்டிக் கேட்ட மனைவியை, அவன் அடித்து துன்புறுத்தி உள்ளான். இதனால், மனவேதனை அடைந்த மனைவி, திருமணமாகி, ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள், தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த பெண்ணின் சகோதரர், டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், அவளின் கணவர் மீது வழக்கு தொடர்ந்தார். அதில், தன் தங்கை தற்கொலை செய்து கொள்ள காரணம், அவள் கணவனின் கள்ளத்தொடர்பு தான். எனவே, தங்கை கணவன் மீது, தற்கொலைக்கு துாண்டிய பிரிவில், தண்டனை வழங்க வேண்டும் என, கோரியிருந்தார்.இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மனோஜ் ஜெயின் பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது:
கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது, அவன் மனைவிக்கு செய்த துரோகம்; அது, அவனின் நேர்மையற்ற செயலை காட்டுகிறது. ஆனால், அவனின் கள்ளக்காதல், கிரிமினல் குற்றமல்ல; அந்த தவறை செய்தான் என்பதற்காக, அவனுக்கு கிரிமினல் குற்றத்தின்படி, தண்டனை வழங்க முடியாது.
அந்த மனைவி நினைத்து இருந்தால், அவனிடம் வாழ பிடிக்காமல் விவாகரத்து பெற்றிருக்க வேண்டும். கணவனின் கள்ளக்காதலால் தான், அவள் தற்கொலை செய்து கொண்டாள்; தற்கொலைக்கு கணவன் துாண்டினான் என, கூறுவதை ஏற்க முடியாது.
இந்த குற்றச்சாட்டிலிருந்து, அந்த கணவனை விடுவிக்கிறேன். அதுபோல, அவன், அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தினான் என்ற குற்றச்சாட்டை உறுதிபடுத்தவும், போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, அந்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், இந்த நபரை விடுவிக்கிறேன்.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
பிரபல எழுத்தாளரும்ஆதரவு கருத்து:பிரபல, மராத்தி எழுத்தாளர், 'ஞானபீடம்' விருது பெற்ற, பாலச்சந்திர நிமேடேயும், கள்ளத் தொடர்பு தப்பில்லை என்ற ரீதியில் குரல் கொடுத்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
மகாபாரத காலத்திலேயே, திருமணமான ஆண்கள், பிற பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. எனவே, இந்தியாவில் கற்பழிப்புகளும், கொலை, தற்கொலை குற்றங்கள் குறைய வேண்டும் என்றால், கள்ளத்தொடர்புகளை குற்றமாக கருதக் கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...