Sunday, September 2, 2018

சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும்.

உணவில் உப்பை குறைவாகப் பயன்படுத்த வேண்டும். உப்பு நிறைந்த ஊறுகாய், அப்பளம், வடாம், கருவாடு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உப்பைக் குறைக்கும்போது அதனோடு சேர்த்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைவதால், சிறுநீரங்களின் வேலைப்பளுவும் குறைகிறது. 24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளைக்கு, 5 கிராம் உப்பு சாப்பிட்டால் போதுமானது.
புகைப் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள நச்சுக்கள், ரத்தக் குழாய்களை நேரடியாகப் பாதித்து ரத்த நாளங்களைச் சுருக்கி அழுத்தத்தை அதிகரிக்கிறது.
உடல் பருமன் அதிகம் இருந்தால் குறைத்துக்கொள்ள வேண்டும். மது, கொழுப்பு நிறைந்த உணவுப் பொருள்கள், மாமிசம், முட்டை, பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோயின்போது ரத்த நாளங்கள் அனைத்தும் சிதைவுற நேரிடுவதால், மிகை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால்தான், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்த அழுத்த நோய் (ரத்தக் கொதிப்பு) இருக்கிறது.
பெண்களின் மரணத்துக்கு 51 சதவீதமும், ஆண்களின் மரணத்துக்கு 37 சதவீதமும் காரணமாக இருப்பது மிகை இரத்த அழுத்தம்தான். இதில் இருந்தே, இந்த நோயின் கொடுமை எவ்வளவு தீவிரமானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, சர்க்கரை நோயாளிகள் மிகை ரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாரடைப்பு
சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று மாரடைப்பு
சர்க்கரை நோயின் தாக்கத்தால் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். தவிர, தசைகளுக்குத் தேவையான சக்தி கிடைக்காததால், இதயத் தசைகள் வலுவிழந்து ரத்தத்தைப் போதுமான அளவு வெளியேற்றவோ, வெளியில் இருந்து வரும் ரத்தத்தை உள்ளிழுக்கவோ முடியாமல் தவிக்கின்றன.
அதேபோல், இதயத்துக்குள் வரும் கொழுப்புகள் மீண்டும் வெளியேறும்போது, இதயத்தின் சிறு நாளங்களில் அடைத்துக்கொள்ள நேரிடுகிறது. மிகை ரத்த அழுத்தம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டுக் கிளம்பும்போது, ஏற்கெனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாளங்கள் சிதைந்து மாரடைப்பு உண்டாகிறது.
சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் எடுத்துக்கொண்டால், மெல்ல மெல்ல அதனுடைய செயல்திறன் குறைந்து, அதிக அளவு இன்சுலின் தேவைப்படும்.
இந்த நிலையில், ரத்தத்தில் உள்ள கொழுப்பில் LDL. கொழுப்பின் அளவும் அதிகமாகிவிட்டால், இதயத்துக்கு சக்தியைக் கொடுக்கும் ரத்த நாளங்களில் அழற்சியை ஏற்படுத்தி, ரத்த நாள உள்சுவரில் கறை போன்ற படிமம் ஏற்பட காரணமாகிறது.
இதனால், ரத்த நாளச்சுருக்கம் ஏற்பட்டு, இதயத்துக்குச் செல்லும் ரத்த அளவு குறைகிறது. முடிவில், இதயத் தசை சரிவர இயங்க முடியாமல் இதயக் கோளாறு ஏற்பட்டு விடுகிறது.
சர்க்கரை நோயாளிகளின் தந்துகிகள் சிதைந்துவிடுவதால், இதய நாளங்களிலோ அல்லது இதயத் தசையிலோ வலி ஏற்படுவதை உணர முடியாது. இவர்கள், மாரடைப்பு வரும் நிலையிலும் வழியை உணராமல் நடந்தே வருவார்கள், இதை, ஆங்கிலத்தில் ‘சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ என்று சொல்வார்கள்.
சர்க்கரை நோய் , இதயத்தை விரிவடையச் செய்து இதயத்தில் இயங்கும் நரம்புகளைப் பாதித்துவிடுவதால், வலி மூளைக்குப் போகாது. அதனால், வலி தெரியாமல் இதயம் நின்று, உயிர் போய்விடும். ஆகவே,
சர்க்கரை நோயாளிகள் முடிந்தவரை
இயற்கை உணவுகளை எடுப்பதன் மூலம் (HDL )நல்ல கொழுப்புகளை அதிகரித்து
(LDL)கெட்ட கொழுப்புகளை குறைக்க முடியும்
அதற்கு முதலில் நம் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி
நம் வயதுக்கு மற்றும் நம் சூழ்நிலைக்கு ஏற்ற இயற்கை உணவுகளை உண்டு இனி இருக்கும் காலங்களில் மருந்து மாத்திரை இல்லாமல் இன்பமாக வாழ்வோம்
இயற்கை வாழ்வியலுக்கு
மாறுவோம்- இனி
மருந்து மாத்திரை
இன்றி இவ்வுலகில்
இருக்கும் காலம் வரை
இனிமையாக வாழ்வோம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...