சில இடங்களில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களை போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களை தவிர்க்கும் இடங்களில் தலை காட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களை தூற்றுவோரும் வாழ்த்தும் படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்..
No comments:
Post a Comment