Sunday, February 3, 2019

ஏங்கும் மனசு..

சிரிச்சிக்கிட்டு இருக்கறவங்கெல்லாம் சந்தோஷமா இருக்கறதில்லை
வெளியே சிரிச்சிக்கிட்டு உள்ளே வலியை அனுபவிக்கறவங்க
அவளுக்கென்ன ரொம்ப அழகான வாழ்க்கை வாழறா..
வசதியான இடம்
நல்ல இடத்துல வேலை
அன்பா பார்த்துக்கறாங்க
கொடுத்து வச்ச மகராசி
எல்லாம் போன ஜென்மத்து புண்ணியம்
அப்படி இப்படின்னு என்னவோ..
ஆனா உள்ளே நாம யாரும் யூகிக்க முடியாத ஒரு அழுத்தம் அவளை பிடிச்சிக்கிட்டு பாடாய் படுத்தி கொண்டிருக்கும்
அது நமக்கு தெரியாது..
சிரிப்பை தொலைச்சிட்டு இருக்கிறவங்களை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா
கலகலப்பாக சிரிச்சிட்டே இருப்பார்கள்
என்னன்னு தெரியாது உடனே
சிரித்து கொண்டிருக்கும் போதே சிரிப்பை சடாரென்று நிறுத்துவாங்க
முடிவில் ஒரு ஹீம் னு உடம்பை குலுக்கிட்டு ஒரு நமட்டு சிரிப்பு வரும்.
அதுக்கு அர்த்தம் நம்மளை மீறி சிரிச்சிட்டோம் னு ஒரு புன்னகை..
அந்த வலியில அந்த தீயில வெந்து கொண்டு இருப்பவங்க அவங்க ..
ஏய் நல்லா தானே பா இருந்தே திடீர்னு என்னாச்சு னு அவங்ககிட்ட அடிக்கடி நாம் கேட்டுருப்போம் ..
ச்சே ஒண்ணும் இல்லை னு கண்ல ஓரத்துல வந்த ஒரு துளி கண்ணீரை துடைச்சிக்கிட்டே சொல்வாங்க.
ஐ யம் ஆல்ரைட் னு ..
சத்தியமா அவங்க நல்லா இல்லை உள்ளார வெந்துக்கிட்டுருப்பாங்க ..
சில சமயங்களில்
உனக்கென்ன ராஜா நீ ன்னு
உனக்கென்ன ராஜாத்தி நீ ன்னு யாரோ புகழறப்ப உதட்டை ஒரு பக்கம் இழுத்து ஹாஹாஹாஹாஹாஹன்னு சிரிச்சிக்கிட்டே அதே சமயத்துல அந்த ரணமும் மனசுல சினிமா போல வந்து போயிக்கிட்டே
ஆமா ஆமா நான் ராஜா தான்னு ஒரு அழுகை துக்கம் வலி கலந்த சிரிப்பு வந்து போகுமே ப்பபா உலகின் மிக பெரிய அவஸ்தை அது..
கத்தி சொல்லனும் போல தோணும், சத்தியமா நான் நல்லா இல்லைன்னு
கதறனும் போல தோணும் ..
யாராவது ஒருத்தர் கண்ணை பார்த்து என்ன ஆச்சு ன்னு கேட்க மாட்டாங்களா ன்னு குழந்தை போல ஏங்கும் மனசு..
அப்பவும் ஒரு புன்னகை மட்டும் வீசி எறிந்து விட்டு கனத்த மனதுடன் தான் போவார்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...