Sunday, February 3, 2019

ஆரோக்கியம். ...

இரு கீரைகள். ...
1)பசலைக்கீரை...
பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்....
பசலைக்கீரையை இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது.
அதிலும் இந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது.
இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, பசலைக்கீரையில் வளமான அளவில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்தசோகையில் இருந்து விடுபடலாம்.
மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள். முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
ஒரு கப் பசலைக்கீரையில்
கலோரி 40 மி. கி.,
கொழுப்பு 0 மி. கி.,
சோடியம் 80 மி. கி. ,
விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கி...
2)மணத்தக்காளி...
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.
100 கிராம் கீரையில்....
ஈரப்பதம் 82.1%,
புரதம் 5.9%,
கொழுப்பு 1%,
தாது உப்புகள் 2.1%,
மாவுச்சத்து 8.9% உள்ளன.
நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (றிலீஷீsஜீலீஷீக்ஷீus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் சி யும் இக்கீரையில் உள்ளன.
மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும்.
சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.
நீர்க்கோவை நோய் மிகச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம்.
கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம்.
மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.
கீரையைப் போலவே பழமும் சக்தி வாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.
நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.
உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.
நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.
மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.
புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது.
ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...