Sunday, February 3, 2019

கார்பரேட் அரசியல்.

பணத்தடை , ஜிஎஸ்டி அந்த வரிசையில் சிறு வியாபாரிகளை ஒழிக்கும் கார்பரேட் அரசியல் பிளாஸ்டிக் தடை ??
நேற்றுவரை நானும் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது ஒரு நல்ல நடவடிக்கைதான் கேரிபேக்குகளை ஒழிப்பது இயற்கையை பாதுகாக்கும் என்று ஆதரித்தவன்..
ஆனால் இன்று நான் கண்ட காட்சி இது வெறும் கேரிபேக்கை ஒழிக்கும் நடவடிக்கை இல்லை..
மாறாக கேரிபேக் என்ற பெயரில் வீட்டில் தின்பண்டங்களை தயாரித்து கடைகளில் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளை ஒழிக்க எடுக்கப்படும் மறைமுக தடையாணை என்பதை புரிந்து கொண்டேன்..
டாஸ்மார்க் என்னும் நஞ்சை ஆறாக ஓடவிடும் அரசு பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க பல ஆயிரம் அரசு அதிகாரிகளை களத்திற்கு அனுப்புகிறது என்றால் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் தான்..
இன்று ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்கும் பொழுது இரு சக்கர வாகனத்தில் தகர டப்பாக்களை கட்டிக்கொண்டு அதில் வீட்டில் தயாரித்த தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்து ஒருவர் இத்தனை ஆண்டுகள் வழக்கமாக வியாபாரம் செய்யும் கடையில் விற்பனைக்காக பொருட்களுடன் வந்த பொழுது அந்த கடை முதலாளி கூறிய வார்த்தை.....!. இனிமேல் இந்த பொருட்களை இங்கு வைக்க வேண்டாம்.. ரைடு அதிகமாக உள்ளது பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வைத்தால் அபராதம் விதிக்கிறார்கள் என்று கூறினார்..
அதற்கு அவர் ........எல்லாம் சரி...! ஆனால் இங்கு நூடுல்சில் இருந்து பிஸ்கட்டில் இருந்து (கார்பரேட் பொருட்கள்) அனைத்தும் பிளாஸ்டிக் பைகளில் தானே உள்ளது..
இதை மட்டும் விற்றால் என்ன தவறு என்று வினவினார்.. அதற்கு கடை முதலாளி.
அந்த பொருட்களுக்கு எல்லாம் தடை இல்லையாம்.. நீங்களும் அதை போன்று பிரிண்ட் போட்டு கொண்டு வாருங்கள் வைக்கலாம் என்றார்,. இது நான் பார்த்த ஒரே ஒரு உதாரணம்.. இன்று ஒரே நாளில் இவரை போன்று எத்தனை சிறு உற்பத்தியாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தொளைத்திருப்பார்கள் என்பதை நனைத்து பாருங்கள்..
இனிமேல் இவர்கள் யாரும் இந்த பொருட்களை வியாபாரம் செய்ய முடியாது என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..
இவர்களும் கார்பரேடகளை போன்று பைகளை தயாரிக்கலாம்.. இது பேசுவதற்கு எளிது ஆனால் எதார்த்தத்தில் சாத்தியமே இல்லை..,! இத்தகைய பைகளை தயாரிக்க குறைந்த பட்ச முதலீடு மட்டும் எப்படியும் 50000 ஆகும்..
சரி என்று கடனை வாங்கி தயாரிக்கலாம் என்றால் தினமும் 500 சம்பாதிக்க ஓடோடி உழைக்கும் ஒரு ஏழையால் எப்படி இவ்வளவு பெரிய தொகையை புரட்ட முடியும்.. சரி இதை வங்கியில் பெறலாம் என்றால் மல்லையாக்களுக்கு ஆயிரம் கோடிகளை கொடுக்கும் வங்கிகள் எப்படி இந்த ஏழைகளுக்கு கொடுக்கும் ..
இந்த உண்மை இந்த சிறு வியாபாரிகளை ஒழிக்க நினைக்கும் அரசுக்கும் தெரியும்.
இதையெல்லாம் மீறி இவர்கள் கூறும் பிரிண்ட் கவரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டால் கூட அந்த வாழ்வாதாரம் கொண்டவர்கள் இவர்களில் 20% பேர் கூட இருக்கமாட்டார்கள் என்பதே எதார்த்தமான உண்மை..
அப்படியே தயாரித்தாலும் கூட நாளையே புதிய சட்டம் போட்டு இதையும் தடை செய்வார்கள்.. அதற்கு முன்னரே கார்பரேட் முதலாளிகள் புதிய பைகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டு விடுவார்கள்.
அதன் பிறகு வட்டிக்கு கடனை வாங்கி பைகளை உற்பத்தி செய்த ஏழை சிறு விவசாயியின் நிலை என்னவாகும் . அனைத்தும் பரிதாபமாகும் என்பதே உண்மை..
எது எப்படியோ இந்தியாவில் சிறு வியாபாரிகள் அதிகம் கொண்ட மாநிலம் தமிழகம் தான்..
அந்த முதுகெலும்பை முதலில் ஒடித்தது பணத்தடை தான்..
அதையும் தாங்கியவர்களை ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒழித்தார்கள்..
இன்றோ இந்தியாவில் பிளாஸ்டிக்கை அதிகம் தயாரிக்கும் குஜராத்தையும் , மகாராஷ்டிராவையும் விட்டுவிட்டு தனக்கு செல்வாக்கே இல்லாத தனது செயல்பாடுகளுக்கு கட்டுப்படும் தமிழக ஆட்சியாளர்களின் உதவியுடன் மீது மீண்டும், மீண்டும் இதுபோன்ற தமிழக சிறு வியாபாரிகளின் கழுத்தில் கயிற்றை கட்டி நெருக்கிறது பாஜக.....!!!
இவர்களின் பிளாஸ்டிக் இயற்கைக்கு பேராபத்து என்ற வாதம் உண்மை என்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட இதை விட பேராபத்தை விளைவிக்கும் ஸ்டெரிலைட் , மீத்தேன் ,
அணுவுலை
போன்ற அழ அழிவுத்திட்டங்களை மட்டும் எந்த அடிப்படையில் தமிழகத்தின் மீது திணிக்கிறார்கள்.. அப்படி என்றால் இவர்களின் உண்மையான நோக்கம் பிளாஸ்டிக்கை தடை செய்து இயற்கையை காப்பாற்றுவது இல்லை ..
அப்படி இயற்கையை காப்பாற்றுவது நோக்கம் என்றால் முதலில் இவர்கள் தடை செய்திருக்க வேண்டியது நூடுல்ஸ் ,
சேம்பு ,
பிஸ்கட்
இன்னும் இதை போன்ற கார்பரேட் முதலைகளின் பிளாஸ்டிக் பைகளை தான்..!!
ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு கார்பரேட் முதலாளிகளை மட்டும் வாழ வைக்க தமிழகத்தில் பல லட்சம் சிறு வியாபாரிகளின் கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்ட திட்டமிட்டு அரங்கேற்றும் நாடகம் தான் பிளாஸ்டிக் தடை என்ற போலியான கோசம்..
சிந்தனை செய் தமிழா.. கார்பரேட் அரசியலை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...