'நான் அண்ணாவின் வாரிசு... ராஜாஜியை எதிர்த்து, காமராஜரை எதிர்த்து அரசியல் செய்தவன், இவரை எதிர்த்து அரசியல் செய்ய முடியாதா...'
இது எம்.ஜி.ஆர்., தனிக்கட்சி துவங்கி களம் கண்டபோது கருணாநிதி கூறிய வரிகள். ஆனால் எம்.ஜி.ஆர். மறையும் வரை அவரை வெல்ல கருணாநிதியால் முடியவில்லை. அதன்பின் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டிய சூழல் எழுந்தபோது இதே வரிகள் முழங்கப்பட்டன. கருணாநிதிக்கு ஜெயலலிதாவெல்லம் ஒரு பொருட்டா என்று தான் அன்றைய அரசியல் வல்லுநர்களும் எழுதினர். ஆனால் கருணாநிதிக்கு சிம்மசொப்பனமாகவே இறுதிவரை ஜெயலலிதா திகழ்ந்தார்.
1991ல் ஜெயலலிதா பெற்ற வெற்றி, மீண்டும் தி.மு.க., எழவே முடியாதோ என்ற சூழலை ஏற்படுத்தியது. ஆனால் ஜெயலலிதாவும், சசிகலாவும், அமைச்சர்களும் செய்த தவறு 1996 ல் மீண்டும் கருணாநிதி வசம் ஆட்சி சென்றது. ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய், வைகோ, ராமதாஸ் என கருணாநிதிக்கு எதிராக கூட்டணி அமைத்து அரசியலில் தன்னை நிறுத்திக்கொண்டார் ஜெயலலிதா.
ராஜாஜியிடம் துவங்கிய கருணாநிதியின் அரசியல் பயணம் அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் நடிகையாக இருந்த ஜெயலலிதாவுடன் சரிக்குச்சரி மல்லுக்கட்ட வேண்டிய நிலையில் கடைசிவரை இருந்தது.அப்படிப்பட்ட சூழலை தி.மு.க., மீண்டும் இன்று எதிர்கொண்டிருக்கிறது. ஸ்டாலின் அரசியலுக்கு வந்த போது பழனிசாமி ஒன்றிய செயலாளர் பதவியிலாவது இருந்திருப்பாரா என்பது சந்தேகமே.
கருணாநிதியை போல ஸ்டாலினும், 'ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்தவன் நான்... எனக்கு பழனிசாமி எல்லாம் எம்மாத்திரம்' என்றார்.நாங்கள் நினைத்தால அடுத்த நொடியே கவிழும், 3 மாதத்தில் கவிழும், 6 மாதத்தில் கவிழும், இடைத்தேர்தலுக்குப்பின் கவிழும் என சொல்லி வந்தாலும் மாதங்கள் போனதே தவிர எதுவும் நடக்கவில்லை. இப்போது 2021க்கு பழனிசாமி- -ஸ்டாலின் என்பதாக அரசியல் யுத்தம் துவங்கிவிட்டது. ஜெயலலிதா மறைவிற்குப்பின் அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பம், சசிகலாவின் ஆதிக்கம், பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் ஸ்டாலினுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின. ஆனால் அதை ஸ்டாலின் சரியாக பயன்படுத்த தவறிவிட்டார்.
மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் ஆட்சியை நிலைநிறுத்துவதில் கவனத்தை செலுத்தினார் பழனிசாமி.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தது, அவரது ஆதரவாளர்களை ஓரம் கட்டி அவரை தனிமைப்படுத்தியது, பா.ஜ.,வுடன் அவருக்கு இருந்த நெருக்கத்தை தடுத்து தன்னை நெருக்கமாக்கி கொண்டது, தினகரனை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாக்கியது என பழனிசாமியின் ஒவ்வொரு அசைவும் அரசியல் சாணக்கியத்தனமாகவே அமைந்தது.
ஆட்சியில் அவர் அதிகநாள் நீடிக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்தான் ஸ்டாலின் இருந்தாரே தவிர, மெஜாரிட்டிக்கே தடுமாறும் ஆட்சியை அசைக்க எந்த பிரம்மாஸ்திரத்தையும் எடுக்கவில்லை. வழக்கமான அரசியல் நடவடிக்கைகள், வீண் பேச்சுகள் என காலம் கடத்தினார்.லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 19 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பழனிசாமியின் கவனம் முழுவதும் இடைத்தேர்தலில்தான் இருந்தது. ஆட்சியை தக்க வைக்க முழு வீச்சில் இறங்கினார். இரு தரப்பிலும் பேச்சு நடத்துவது தெரிந்தும் தே.மு.தி.க.,வை வெளியேற விடவில்லை. காரணம் சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என கணக்கிட்டார். விளைவு ஆட்சி தப்பியது.
அ.தி.மு.க., வை அகற்ற முடியவில்லை என வருத்தப்படுவதை விட்டுவிட்டு, லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளோம் என்ற வெற்றிமிதப்பில் தி.மு.க. இருந்தது. அந்த வெற்றியால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்து, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைப்பதை பற்றி சிந்திக்காமல் லோக்சபா தேர்தல் வெற்றியே தனது மகன் உதயநிதியின் பிரசாரத்தால் தான் கிடைத்தது என்ற பிம்பத்தை உருவாக்க தி.மு.க., முயன்றது. அதில் வெற்றி பெற்று உதயநிதிக்கு இளவரசாக மகுடமும் சூட்டினர். வாரிசுகளை அரசியலில் இறக்கியுள்ள ஐ.பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி போன்றவர்களை தவிர பலருக்கு இந்த முடிசூடல் நெருடலை ஏற்படுத்தியது. இதை தலைமை உணர்ந்ததாக தெரியவில்லை. அடுத்து நடந்த திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க.,வின் மமதையை அதிகரித்தது.
திருப்பரங்குன்றத்தில் அ.ம.மு.க., பிரித்த ஓட்டுகளை விட தி.மு.க.வின் வெற்றி ஓட்டுகள் குறைவு. வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில் தட்டுத்தடுமாறி வெற்றி கிடைத்தது. அதிலும் 3 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.,வை விட ஓட்டு குறைவு. வாணியம்பாடி சட்டசபை தொகுதியின் தயவால்தான் வெற்றியே கிடைத்தது. அப்போதாவது நிதர்சனம் என்ன, களநிலை என்ன என ஆய்வு செய்து தங்கள் நிலைப்பாட்டை பரிசீலனை செய்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. விளைவு... இப்போது தன்வசம் இருந்த 2 தொகுதிகளை இழந்து நிற்கிறது தி.மு.க. அணி. அதிலும் மிகப்பெரிய ஓட்டு வித்தியாசம். இது தி.மு.க.,விற்கு விடப்பட்டுள்ள மிகப்பெரும் எச்சரிக்கை.
இந்நிலையில் அ.தி.மு.க.,வோ தனது ஓட்டுகளை பிரிக்கும் அ.ம.மு.க.,வை போட்டியில் இருந்து விலக வைத்தது, சரியான நேரத்தில் ஸ்டாலினுக்கு எதிராக ராமதாசை பேசவைத்து வன்னியர் ஓட்டுகளையும், வன்னியருக்கு ஆதரவாக ஸ்டாலினை பேசவைத்து பிற சமுதாய ஓட்டுகளையும் விக்கிரவாண்டியில் அப்படியே வளைத்தது,பண பலத்திற்காக நிறுத்தப்பட்ட வெளியூர் காங்., வேட்பாளருக்கு எதிராக உள்ளூர்காரை நிறுத்தி நாங்குநேரியில் தனது வெற்றியை அ.தி.மு.க, உறுதிப்படுத்தியது. இப்போதும் தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் 'பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி.. அதிகார துஷ்பிரயோகம்' என அரதப்பழசான பிரசாரங்களைத்தான் மேற்கொண்டு உள்ளது. பிரச்னையின் ஆழத்தை புரிந்துகொள்ளாமல் இதே நிலைமை தொடர்ந்தால் 2021 தேர்தலை தி.மு.க., எதிர்கொள்வது கடினம்.
காரணம் அந்த தேர்தல்களம் வித்தியாசமானதாக மாறி இருக்கும். ரஜினி களமிறங்கலாம். சசிகலா வெளியே வந்திருக்கலாம். அ.ம.மு.க., நாம்தமிழர், ம.நீ.ம., என பல கட்சிகள் அவரவர் பங்கிற்கு ஓட்டுகளை பிரிக்கும். போட்டி என்பது பலமுனையாக இருக்கும்.முதல்வர் பதவிக்கு ஸ்டாலினை விட ஏற்றவர் பழனிசாமி என்ற எண்ணம் மக்களுக்கு உருவானால் ஆச்சரியம் இல்லை. காரணம் முதல்வர் உட்பட அனைவரையும் எளிதில் அணுக முடிகிறது. பேரிடர் காலங்களில் அமைச்சர்கள் தீவிரமாக களப்பணியாற்றுகின்றனர். நில அபகரிப்பு, பெரிய அளவிலான அதிகார அத்துமீறல் புகார்கள் இல்லை. பிரசாரத்தின்போது இவை அ.தி.மு.க.,வுக்கு சாதமாக இருக்கும். தி.மு.க., ஆட்சிக்காலத்து அத்துமீறல்கள், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் பரோட்டா கடை, அழகு நிலையம் என கட்சியினரின் லீலைகள் தி.மு.க.விற்கு பாதகமாக அமையலாம்.
கருணாநிதியை போன்று வசீகரமாக பேசக்கூடிய தலைவராக ஸ்டாலின் இல்லை. அதே போன்று தான் பழனிசாமியும் என்பது தி.மு.க.,விற்கு ஆறுதல். தனக்கு போட்டியாக வளரக்கூடாது என அழகிரி குடும்பத்தை ஓரம்கட்டினாலும், களப்பணியில் அழகிரி சிறப்பாக செயல்படக்கூடியவர்.ஹிந்து விரோத கட்சி என்ற நிலைப்பாட்டை தி.மு.க., மாற்ற வேண்டும். இதை வெளிப்படையாக வைகோ பேசியுள்ளார். தி.மு.க.,விற்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழகத்தில் ஆன்மிகம் வலுவடைந்து வருகிறது. எனவே 'நாங்கள் பெரியார் வாரிசுகள்' என்று கூறிக்கொண்டு 'ஹிந்து மதத்தை மட்டும்' வசைபாடும் நிலைப்பாட்டை மாற்றாவிட்டால் ஓட்டு அறுவடை செய்வது மிகவும் கடினம்.
இதையெல்லாம் சரி செய்து 2021 தேர்தலை சந்திக்க இப்போதே களப்பணியை தி.மு.க., துவங்கினால் தான் முடியும். துரதிருஷ்டவசமாக நிதர்சனத்தை புரிந்துகொள்ளாமல் இன்னமும் பழனிசாமி ஆட்சி பினாமி ஆட்சி என்று பேசிக்கொண்டு இருக்கிறது, தி.மு.க. .எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது பல ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த அனுபவம் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., விற்கு உண்டு. 2021ல் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றால் அந்த அனுபவத்தை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பெறவேண்டியிருக்கும். என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்.... காத்திருப்போம்.

No comments:
Post a Comment